விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிக்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் பெடரர் || Roger Federer Wimbledon final overcoming Novak Djokovic
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
  • 20 ஆயிரம் வாக்குசாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்
  • ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடலுக்கு ராகுல்காந்தி, மனோகர் பாரிக்கர், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை
விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிக்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் பெடரர்
விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிக்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் பெடரர்
லண்டன், ஜூலை. 6-  

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் நேற்று நடந்த கால் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தார். அவர் மிக்கைல் யூஸ்னியை 6-1, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் தோற்கடித்தார்.  

மற்றொரு கால் இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் முன்னணி ஆட்டக்காரரான ஜோகோவிக்கும் புளோரியன் மேயரும் மோதினார்கள். அதில் ஜோகோவிக் 6-4, 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.  

இந்நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் பெடரர்- ஜோகோவிக் ஜோடி மோதியது. இதில் ரோஜர் பெடரர் 6-3, 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிக்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 

பெடரர் இதுவரை 32 கிராண்ட்சிலாம் அரை இறுதியில் விளையாடி இருக்கிறார். 6 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தற்போது 7-வது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வெல்ல முனைப்புடன் விளையாடி வருகிறார்.

இதுவரை கிராண்ட்சிலாம் போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளில் இந்த ஜோடி 6 அரை இறுதியில் மோதி இருக்கிறது. இதில் 4 போட்டிகளில் ஜோகோவிக் வெற்றி பெற்றுள்ளார். விம்பிள்டனில் இருவரும் அரை இறுதியில் மோதியது இதுவே முதல் முறையாகும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

தெற்காசிய விளையாட்டு: தடகளத்தில் ஒரே நாளில் இந்தியா 11 தங்கம் வென்று அசத்தல்

12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இரண்டு நகரங்களில் நடந்து ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif