எங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தப்போவது இல்லை: அன்னா ஹசாரே குழுவினர் || we are not going to stop hunger strike anna hazare team
Logo
சென்னை 03-03-2015 (செவ்வாய்க்கிழமை)
எங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தப்போவது இல்லை: அன்னா ஹசாரே குழுவினர்
எங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தப்போவது இல்லை: அன்னா ஹசாரே குழுவினர்
புதுடெல்லி, ஜூலை.6-


புதுடெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நாளன்று பல்வேறு அமைப்புகள் ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டங்களை நடத்த அனுமதி கேட்டுள்ள நிலையில், அன்னா ஹசாரே குழுவினரும் பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 14 பேர்மீது லஞ்ச ஊழல் பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க மறுப்பு தெரிவித்ததைக் கண்டித்து இம்மாதம் 25-ம் தேதி துவங்கவிருக்கும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு டெல்லி போலீசாரிடம் அனுமதி கேட்டனர்.

டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், எங்களுடைய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று அன்னா ஹசாரே குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது என்று அலுவலக ரீதியாகக் கூறப்படுகிறது.

இந்திய மக்களை எம்.பி-க்கள் எவ்வளவு தூரம் புறக்கணிக்கிறார்கள்? அவர்களை விட்டு எவ்வளவு தூரம் விலகியிருக்க விரும்புகிறார்கள் என்று நிருபர்களிடம் கேட்டார். இதற்கிடையே, அன்னா ஹசாரே குழுவினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று இடத்தைக் குறிப்பிட்டு, அவர்களின் கருத்தை டெல்லி போலீசார் கேட்டிருக்கிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 9 பேருக்கு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கவர்னரின் முதன்மைச் செயலாளர் என்ற ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif