ஆதர்ஷ் ஊழல் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியை மாற்றாதீர்கள்: பா.ஜனதா || aadharsh corruption case investigation cpi officers dont change bjp
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதர்ஷ் ஊழல் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியை மாற்றாதீர்கள்: பா.ஜனதா
ஆதர்ஷ் ஊழல் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியை மாற்றாதீர்கள்: பா.ஜனதா
மும்பை, ஜூலை.6-


மும்பை ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரி ரிஷிராஜ் சிங்கை மாற்றினால், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்து விடுவார்கள். அதன் விசாரணையே நிறுத்தப்பட்டுவிடும். அதனால் அவரை இந்த வழக்கின் விசாரணை முடியும்வரை அந்தப் பதவியிலிருந்து மாற்றக்கூடாது என்று மகாராஷ்டிர பாரதிய ஜனதா தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான வினோத் தாவ்டே பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இதேபோல் மத்திய உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

1985-ம் வருட கேரள மாநில ஐ.பி.எஸ். கேடர் அதிகாரியான சிங், ஆதர்ஷ் ஊழலில் தொடர்புடைய முன்னாள் முதல்வர் அசோக் சவான் உள்ளிட்ட 13 பேர்மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், நேற்று அவர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சி.பி.ஐ-யின் வழக்கமான மாறுதல் என்றாலும், ஆதர்ஷ் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மாற்றம் குறித்த கடிதம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த துருக்கிக்கு போர் விமானங்களை அனுப்புகிறது சவூதி அரேபியா

இஸ்தான்புல், பிப்.14 சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக நேட்டோ உறுப்பினரான துருக்கிக்கு சவூதி அரேபியா ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif