அமெரிக்க அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் ரூ.500 கோடி நிதி திரட்டினார் || america president election oppose party
Logo
சென்னை 10-10-2015 (சனிக்கிழமை)
அமெரிக்க அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் ரூ.500 கோடி நிதி திரட்டினார்
அமெரிக்க அதிபர் தேர்தல்:
 எதிர்க்கட்சி வேட்பாளர் ரூ.500 கோடி நிதி திரட்டினார்
நியூயார்க், ஜுலை. 6-

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் மாசாசுட் மாகாண முன்னாள் கவர்னர் மிட்ரோமினியும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் ஒபாமா பஸ்சில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார். போலேட், ஒகியோ, பிட்ஸ்பார்க், பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். கொலோரயோ, மிசிகன் ஒகியோ உள்ளிட்ட பல மாகாணங்களில் மிட் ரோம்னியும் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின் போது இரு கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் நிதி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜுன் மாதம் மட்டும் எதிர்க்கட்சி வேட்பாளர் மிட்ரோம்னி ரூ.500 கோடி தேர்தல் நிதி திரட்டியுள்ளார்.

இந்த தகவலை அவரது குடியரசு கட்சி வெளியிட்டது. ஆனால் ஆளும் ஜனநாயக கட்சி தான் திரட்டிய தேர்தல் நிதி குறித்த விவரங்களை வெளியிடவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் ஒகியோ மாகாணம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அங்கு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுபவர் தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே, அங்கு அதிபர் ஒபாமா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஏனெனில் தற்போது அங்கு வேலையில்லா திண்டாட்டம் 7.3 சதவீதம் ஆக அதிகரித்து உள்ளது. நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஒபாமா கடும் போட்டியை சந்திக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் அவர் கொண்டு வந்துள்ள `அனைவருக்கும் சுகாதாரம்' என்ற சட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.     
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சிரியா போராளிகளுக்கு பயிற்சி அளிப்பதை கைவிட்ட அமெரிக்கா: ஆயுதங்களை மட்டும் வழங்குவதாக அறிவிப்பு

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது ....»