டிராவிட் தலைமையில் இந்திய அணி பெற்ற வெற்றி, அணியில் இருந்த வீரர்களுக்கே பிடிக்கவில்லை: கிரேக் சேப்பல் || india cricket team won captain dravid Greg Chappell
Logo
சென்னை 01-08-2015 (சனிக்கிழமை)
  • சென்னையிலிருந்து மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றிச்சென்ற ரெயில் பெட்டியில் தீ விபத்து
  • சசிபெருமாளின் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
  • டாஸ்மாக் மதுபான கடைகளால் தமிழ்நாடு நாசமாகி விட்டது: வைகோ குற்றச்சாட்டு
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு
  • மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி
  • விடுமுறை நாளில் பணிபுரிந்து கலாமுக்கு அஞ்சலி செலுத்திய ராஜஸ்தான் சட்டமன்ற ஊழியர்கள்
டிராவிட் தலைமையில் இந்திய அணி பெற்ற வெற்றி, அணியில் இருந்த வீரர்களுக்கே பிடிக்கவில்லை: கிரேக் சேப்பல்
டிராவிட் தலைமையில் இந்திய அணி பெற்ற வெற்றி, அணியில் இருந்த வீரர்களுக்கே பிடிக்கவில்லை: கிரேக் சேப்பல்
மும்பை, ஜுலை. 6-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரேக் சேப்பல் புதிய புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த புத்தகம் இந்தியாவில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அந்த புத்தகத்தில் சேப்பல் இந்திய அணியில் வீரர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததாக புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அந்த புத்தகத்தில் சேப்பல் எழுதி இருப்பதாவது:-

டிராவிட் கேப்டனாக இருந்த போது (2005-2007-ம் ஆண்டு) இந்திய அணி பெற்ற வெற்றியை எல்லா வீரர்களும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.

டிராவிட் தலைமையில் அணிக்கு கிடைத்த வெற்றியை அணியில் உள்ள சில வீரர்களே விரும்பவில்லை. சில வீரர்கள் டிராவிட்டுக்கு எதிரான வேலையை செய்தனர். அவர் மற்றவர்களுக்கு அளித்தது போல் முழு மனதுடன் மற்ற வீரர்களும் அவருக்கு ஆதரவு அளித்து இருந்தால் தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் நிலையே வேறு மாதிரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அத்துடன் டிராவிட் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக உருவெடுத்து இருப்பார். 2-வது பேட்டிங் செய்து இலக்கை எப்படி எட்டுவது என்பதை டிராவிட் நன்றாக கற்று இருந்தார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 9 ஒருநாள் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்றது. அத்துடன் 2-வது பேட்டிங் செய்து தொடர்ச்சியாக 17 போட்டியில் வெற்றி கண்டு உலக சாதனை படைத்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் 35 வருடத்திற்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தொடரை வென்றது. இந்த வெற்றி டிராவிட்டின் தலைமையில் கிடைத்தது. இதே போல் தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றியையும் ருசித்தது. அந்த தொடரில் கடைசி டெஸ்டில் 2-வது இன்னிங்சில் சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தால் இந்திய அணி அங்கு முதல் முறையாக தொடரையும் வென்று இருக்க முடியும். டிராவிட் மீது எனக்கு எப்போதும் அன்பும், மரியாதையும் உண்டு.

இவ்வாறு அந்த புத்தகத்தில் சேப்பல் கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

சானியா மிர்சாவுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது?

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ....»

MM-TRC-B.gif