ஒட்டிப்பிறந்த இரட்டையரில் குழந்தை ஆராதனா சாவு || madyapradesh twins child one child aradhana dead
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
ஒட்டிப்பிறந்த இரட்டையரில் குழந்தை ஆராதனா சாவு
ஒட்டிப்பிறந்த இரட்டையரில் குழந்தை ஆராதனா சாவு
போபால், ஜூலை. 6-
 
மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்யாதவ் (ஏழை விவசாயி). இவரது மனைவிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகளும் உடல் ஒட்டிய நிலையில் இருந்தன. ஆஸ்பத்திரியில் வைத்து குழந்தைகள் பராமரிக்கப்பட்டன.
 
ஒரு குழந்தைக்கு ஸ்டுட்டி என்றும் மற்றொரு குழந்தைக்கு ஆராதனா என்றும் பெயர் சூட்டப்பட்டது. ஒட்டிபிறந்த இரட்டை குழந்தைகளை ஆபரேஷன் மூலம் தனித்தனியே பிரித்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் 20-ந்தேதி இதற்கான ஆபரேஷன் நடந்தது. 22 டாக்டர்களை கொண்ட குழு ஆபரேஷன் செய்து, இரண்டு குழந்தைகளையும் தனியே பிரித்து எடுத்தது.
 
இதில் ஆராதனாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரண்டு குழந்தைகளும் முதலாவது பிறந்த நாளை கொண்டாடின. மத்திய பிரதேச முதல் - மந்திரியே நேரில் வந்து குழந்தைகளை வாழ்த்தினார். ஸ்டுட்டி மட்டும் கேக் வெட்டினாள். அவளுக்கு கையை பிடித்து கேக் வெட்ட முதல்- மந்திரி உதவினார். அந்த சமயத்தில் ஆராதனாவின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் இருந்தது.
 
ஆனால் நேற்று திடீரென அவளின் உடல்நிலை மோசமடைந்தது. அவளை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனால், முயற்சி வீணானது. மாலை 3 மணியளவில் இரண்டு முறை நெஞ்சுவலி ஏற்பட்டது. அதன்பிறகு சிறிது நேரத்தில் ஆராதனா மரணம் அடைந்தாள். அந்த மரணம் ஆஸ்பத்திரியையே சோகத்தில் ஆழ்த்தியது. நர்சுகள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவு செல்லாது: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புதுடெல்லி, பிப். 12–6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif