8 ஆயிரம் கோடி வக்பு வாரிய சொத்துக்களை மீட்க வேண்டும்: இந்திய தேசிய லீக் கோரிக்கை || 8 thousands crores vakbu varia assets rescue indian desiya league
Logo
சென்னை 29-08-2015 (சனிக்கிழமை)
8 ஆயிரம் கோடி வக்பு வாரிய சொத்துக்களை மீட்க வேண்டும்: இந்திய தேசிய லீக் கோரிக்கை
8 ஆயிரம் கோடி வக்பு வாரிய சொத்துக்களை மீட்க வேண்டும்: இந்திய தேசிய லீக் கோரிக்கை
சென்னை, ஜூலை. 6-
 
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ரகீம் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் கோடி சொத்து வக்பு வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் 7 ஆயிரம் கோடி சொத்துக்கள் மட்டுமே வக்பு வாரியம் பட்டா பத்திர பதிவு செய்துள்ளது. மீதமுள்ள 8 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு பத்திர பதிவு செய்யவில்லை.
 
அரசு உடனே மீதி உள்ள இடங்களை பத்திர பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
திருவல்லிக்கேணி பகுதியில் ஏராளமான வக்பு வாரிய சொத்துக்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். எல்லீஸ் ரோடு பெரிய மசூதி தெருவில் 2 கிரவுண்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். அந்த சொத்தின் மதிப்பு ரூ. 8 கோடியாகும்.
 
இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள கோவில் நிலங்களை மீட்க தனி அமைப்பு ஏற்படுத்தியது போல வக்பு சொத்துக்களை கலெக்டர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகளை கொண்டு மீட்க வேண்டும். வக்பு வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
 
வக்பு வாரியத்திற்கு தனி நபர்கள் வக்பு செய்த காரணம் முஸ்லிம் விதவைகள் மறுவாழ்வு, ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுக்க வேண்டும். ஏழை முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் உதவி தொகை வழங்க வேண்டும்.
 
இந்த பிரச்சினையில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி வக்பு சொத்துக்களை மீட்க உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
அருகில் நிர்வாகிகள் முகமது அலி, ஏர்வாடி காசிம், பத்ருத்தீன் ஆகியோர் உடனிருந்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

சகோதரத்துவ தினம்: ராக்கி கட்டி பெண்களுக்கு விபத்து காப்பீடு பாலிசி பரிசு வழங்கினர் - பா.ஜனதாவினர் கொண்டாட்டம்

சென்னை, ஆக. 29–ரக்‌ஷா பந்தன் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சகோதரத்துவ உறவை பலப்படுத்தும் வகையில் ....»

amarprash.gif