கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கடையநல்லூர் பழவியாபாரி வெளிநாட்டுக்கு ஓட்டம்? || kidnapped kadiyanallur fruit business man abroad run
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கடையநல்லூர் பழவியாபாரி வெளிநாட்டுக்கு ஓட்டம்?
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கடையநல்லூர் பழவியாபாரி வெளிநாட்டுக்கு ஓட்டம்?
கடையநல்லூர்,ஜூலை.6-


கடையநல்லூர் கிருஷ்ணா புரம் ரெயிவேபீடர் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது34). இவர் கடையநல்லூர் தினசரி மார்க்கெட்டில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். மாரியப்பனின் மனைவி கஸ்தூரி(27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கடந்த 27-ந்தேதி இரவு 7மணியளவில் வீட்டைவிட்டு வெளியே சென்ற மாரியப்பன், பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த கஸ்தூரி, தனது கணவர் மாயமானது குறித்து கடைய நல்லூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அவர் தன்னுடைய புகாரில், தனது கணவருக்கும், கடையநல்லூர் தினசரி மார்க்கெட் அருகே பியூட்டிபார்லர் நடத்திவந்த கிருஷ்ணாபுரம் கோபால கிருஷ்ணர் கோவில் தெருவை சேர்ந்த பாலு என்பவரின் மகள் ஜமுனா(27) என்பவருக்கும் பழக்கம் இருந்ததாகவும், ஆகவே ஜமுனா தனது கணவரை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதன்பேரில் கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மாரியப்பனுக்கும், ஜமுனாவுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்ததும், திருமணம் செய்யாமலேயே இருவரும் ரகசியமாக கணவன்-மனைவியாக வாழ்ந்துவந்ததும், அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து கஸ்தூரி புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாரியப்பன், அவரை கடத்தியதாக புகார் கூறுப்பட்டுள்ள ஜமுனா ஆகிய 2 பேரையும் தேடிவந்தனர். இதில் ஜமுனா சிக்கினார்.

அவரையும், கஸ்தூரியையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது ஜமுனாவும், கஸ்தூரியும் தனக்கும் மாரியப்பனுக்கும் தான் முதலில் திருமணம் நடந்தது என்று கூறி, தன்னுடன் சேர்த்து வைக்குமாறு இருவரும் தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. மாரியப்பன் எங்கே? என்று கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று ஜமுனா கூறியதாக தெரிகிறது. இதனால் மாரியப்பன் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என்பது மர்மமாக உள்ளது.

ஆனால் ஜமுனா கூறியதன்பேரில் மாரியப்பன் வெளிநாட்டிற்கு எங்கும் சென்றிருக்கலாம் என்று கஸ்தூரி கூறினார். அதனடிப்படையில் மாரியப்பன் வெளிநாட்டிற்கு ஓடிவிட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கஸ்தூரி கூறும்போது, புகார் கொடுத்த எனக்கு நீதிகிடைக்கும் வகையில் போலீசார் செயல்படுவதாக தெரியவில்லை. ஆகவே எனது கணவரை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தி நாளைமறுநாள் (8-ந்தேதி) பாளையில் உள்ள நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தனது குழந்தைகளுடன் தர்ணா போராட்டதத்தில் ஈடுபட உள்ளேன் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருநெல்வேலி

section1

தவறான சிகிச்சையால் காங். பிரமுகர் பலி: கைதான சித்தா டாக்டர் பாளை சிறையில் அடைப்பு

ஆலங்குளம், பிப்.11 –நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif