மதுரையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 6 மாடி ஆஸ்பத்திரி கட்டிடத்திற்கு சீல் வைப்பு:கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை || Built without permission madurai Seal storey hospital building fund Collector ancul Mishra action
Logo
சென்னை 31-01-2015 (சனிக்கிழமை)
மதுரையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 6 மாடி ஆஸ்பத்திரி கட்டிடத்திற்கு சீல் வைப்பு:கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை
மதுரையில் அனுமதியின்றி கட்டப்பட்ட
6 மாடி ஆஸ்பத்திரி கட்டிடத்திற்கு சீல் வைப்பு:கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை

மதுரை, ஜூலை. 6-


மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளின் வாயிலாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதில் விதிமீறல்கள் நடந்துள்ளது. விதிமுறைகளை மீறி மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ள 28 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது.

விதிமீறல்கள் தொடருமானால் மதுரை மாநகராட்சிக்கு கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரம் பறிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா நிருபர்களிடம் கூறுகையில், மதுரை மாநகராட்சியில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் கட்டிட அனுமதி வழங்கப்படுகிறது. கலெக்டர் தெரிவித்த 28 கட்டிடங்களுக்கும் கடந்த தி.மு.க. ஆட்சியில், தி.மு.க. நிர்வாகத்தால் வழங்கப்பட்டவை.

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சி நேர்மையாக செயல்பட்டு வருகிறது. எந்தவித சட்ட மீறலும் நடைபெறவில்லை. 4 ஆயிரம் சதுரடியில் 5 கட்டிடங்களுக்கு மட்டும் மாநகராட்சி அனுமதி வழங்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஆனால் கட்டிட அனுமதி வழங்கவில்லை. மாநகராட்சிக்கு எந்தவித நோட்டீசும் அனுப்பாமல் மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அறிக்கை வெளியிட்டு இருப்பது துரதிஷ்டவசமானது என்றார்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், எப்போது நடந்தாலும் தவறு தவறுதான். விதிகளை மீறிய கட்டிடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

இந்நிலையில் அனுமதி மீறி கட்டப்பட்ட 28 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அன்சுல் மிஸ்ரா முடிவு செய்தார்.

அதன்படி தல்லாகுளம் பெருமாள்கோவில் அருகே கட்டப்பட்ட 6 மாடி ஆஸ்பத்திரி கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து கலெக்டர் அந்த கட்டிடத்திற்கு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்தவர்களிடம் கட்டிட அனுமதி தொடர்பான ஆவணங்களை கேட்டு சோதனை மேற்கொண்டார். இதில் அந்த கட்டிடம் உள்ளூர் திட்ட குழுமத்திடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த ஆஸ்பத்திரி கட்டிடத்திற்கு சீல் வைக்க கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தர விட்டார். அதன்படி உள்ளூர் திட்டக்குழும மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் முன்னிலையில் அக்கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்டிரக்சர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்து மாநராட்சி வண்டியில் ஏற்றினர்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் மதுரை ஏ.வி. மேம்பாலம் அருகே கட்டப்பட்டுள்ள 11 மாடி கட்டிடமும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இங்கும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கட்டிடம் இன்றோ அல்லது நாளை சீல் வைக்கப்படும் என்று தெரிகிறது.

கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அனுமதி பெறாமல் விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டிட உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மதுரை

section1

திருமங்கலம் மருத்துவமனையில் அரசு ஊழியர் தற்கொலை

திருமங்கலம், ஜன. 31–திருமங்கலம் முகமதுஷா புரத்தில் குடியிருப்பவர் லோகேஸ்வரன் (வயது58). இவர் திருமங்கலத்தில் உள்ள அரசு ....»