தன்னை தாக்கியவர்கள் என்று கருதி பக்கத்து தொகுதி மக்களை தாக்கிய பெண் எம்.எல்.ஏ. ரூபி || lady mla rubi attack on neibourhood constituency people
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
தன்னை தாக்கியவர்கள் என்று கருதி பக்கத்து தொகுதி மக்களை தாக்கிய பெண் எம்.எல்.ஏ. ரூபி
தன்னை தாக்கியவர்கள் என்று கருதி பக்கத்து தொகுதி மக்களை தாக்கிய பெண் எம்.எல்.ஏ. ரூபி
கவுகாத்தி, ஜுலை 6-
 
அசாம் மாநிலம் வொர்கோலா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ரூபிநாத். ஏற்கனவே திருமணமாகி 2 வயது குழந்தைக்கு தாயான ரூபிநாத், முறைப்படி கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமலேயே தன்னைவிட நான்கு வயது குறைந்த ஜாக்கி ஜாகீர் என்ற வாலிபரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
 
இதற்காக அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறினார். கடந்த மாதம் 29-ந்தேதி கரீம்கஞ்ச் நகர ஓட்டலில் ரூபிநாத்தும், ஜக்கி ஜாகீரும் தங்கி இருந்த போது ஒரு கும்பல் புகுந்து இருவரையும் சரமாரியாக தாக்கியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். இந்நிலையில் பக்கத்து தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் இவர்கள் இருவருக்கும் எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.
 
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வடக்கு கரீம்கஞ்ச் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான கமலக்யா புர்கயாஸ்தா, திஸ்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பேக்ஸ் மூலம் ஒரு புகார் அனுப்பினார்.
 
அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-
 
எனது எம்.எல்.ஏ. அலுவலகம் திஸ்பூர் கேபிடல் காம்ப்ளக்சில் உள்ளது. நேற்று இரவு என்னை பார்க்க வந்த தொகுதி மக்கள் அலுவலகத்தில் காத்திருந்தனர். அப்போது நான் வெளியே சென்றிருந்தேன். அந்த சமயத்தில் ரூபி நாத்தும், அவரது இரண்டாவது கணவர் ஜக்கி ஜாகீரும் அடியாட்கள் சிலருடன் எனது அலுவலகத்துக்கு வந்தனர். எனது அலுவலக பராமரிப்பாளரையும், பார்வையாளர்களில் சிலரையும் அவர்கள் அடித்து உதைத்தனர்.
 
ஓட்டலில் நடந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கருதி, பார்வையாளர்களை ரூபிநாத் ஆட்கள் தாக்கி உள்ளனர். அலுவலக பொருள்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுவிட்டனர். எனவே ரூபிநாத், அவரது இரண்டாவது கணவர் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
புகாரின் பேரில் ரூபிநாத், அவரது இரண்டாவது கணவர் ஜாகீர் மற்றும் சிலர் மீது திஸ்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif