ரூ.2 கோடி மதிப்புள்ள மான் கொம்புகள் பறிமுதல்: 2 பேர் கைது || Rs.2 crore deer horns seized 2 arrested
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
ரூ.2 கோடி மதிப்புள்ள மான் கொம்புகள் பறிமுதல்: 2 பேர் கைது
ரூ.2 கோடி மதிப்புள்ள மான் கொம்புகள் பறிமுதல்: 2 பேர் கைது
திருவள்ளூர், ஜூலை. 6-
 
திருவள்ளூர் அருகே அரண்வாயல்குப்பத்தில் உள்ள 2 குடோன்களில் மான் கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரூபோஸ்குமார் மீனா உத்தரவின் பேரில் திருவள்ளூர் டி.எஸ்.பி பாலசந்திரன் தலைமையில் போலீசார் அரண்வாயல்குப்பம் சென்றனர். அங்குள்ள குடோன்களில் சோதனை நடத்தினார்கள்.
 
அப்போது, திருவள்ளூர் ராஜாஜிபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (44), மணவாளநகரைச் சேர்ந்த கோதண்டன் (45) ஆகியோருக்கு சொந்தமான குடோன்களை சோதனை செய்தார்கள். இதில், 2 குடோன்களிலும் மான் கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
 
2 குடோன்களிலும் மொத்தம் 20 டன் மான்கொம்புகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக இங்கு மான்கொம்புகள் பதுக்கி வைக்கப்படுவதும், அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் விசாரணையில் தெரியவந்தது.
 
இதையடுத்து, மான் கொம்புகளை குடோனில் பதுக்கி வைத்திருந்த சுப்பிரமணி, கோதண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 20 டன் மான்கொம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பல வருடங்களாக மான் கொம்புகளை சேகரித்து விற்பனை செய்வதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
 
ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மான் கொம்புகளை வாங்கியதாகவும் கூறினார்கள். இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? இதன் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருவள்ளூர்

section1

மீஞ்சூரில் நள்ளிரவில் முகத்தில் பிளீச்சிங் பவுடர் தூவி சென்னை வாலிபர் அடித்து கொலை

பொன்னேரி, பிப். 9– சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் இமாம் உசேன் அன்சாரி (வயது 25). இவரது மனைவி ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif