திண்டுக்கல் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.பி.ராமன் மரணம் || dindical DMK EX minister OB Raman death
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
திண்டுக்கல் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.பி.ராமன் மரணம்
திண்டுக்கல் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.பி.ராமன் மரணம்
திண்டுக்கல், ஜூலை.6-


தி.மு.க. ஆட்சியில் 1967-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை மின்சாரம் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் ஓ.பி.ராமன். பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வில் இணைந்தார். பின்னர் அரசியலை விட்டு முழுவதுமாக ஒதுங்கி இருந்த ஓ.பி.ராமன் திண்டுக்கல் அருகே சில்வார்பட்டியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.

80 வயதான ஓ.பி.ராமனுக்கு நேற்று இரவு திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. ஓ.பி.ராமன் உடல் பொதுமக்கள் பார்வைக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை 3 மணி அளவில் ஓ.பி.ராமனின் இறுதி சடங்கு நடக்கிறது.

ஓ.பி.ராமன் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டியில் பிறந்த ஓ.பி. ராமன். பி.ஏ.பி.எல் படித்தவர். 1960-ம் ஆண்டு திண்டுக்கல், வேடசந்தூர் கோர்ட்டுகளில் வக்கீலாக பணிபுரிந்தார். அப்போது ஏற்பட்ட அரசியல் ஈடுபாட்டின் காரணமாக தி.மு.க.வில் சேர்ந்து தீவிர அரசியலில் குதித்தார். இவரது கட்சி பணியை பாராட்டி 1967-ல் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தேர்தலில் கக்கனை தோற்கடித்து ஓ.பி.ராமன் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தி.மு.க. ஆட்சியில் 1967 முதல் 1976-ம் ஆண்டு வரை மின்சாரம், வனத்துறை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கினார். இவருக்கு மங்கையர்கரசி என்ற மகள் உள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திண்டுக்கல்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif