சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணியிடம் சில்மிஷம் செய்த டாக்டருக்கு 3 ஆண்டு சிறை: வேலூர் கோர்ட்டு தீர்ப்பு || Pregnant women came treatment doctor years prison cilmisam Vellore court ruling
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணியிடம் சில்மிஷம் செய்த டாக்டருக்கு 3 ஆண்டு சிறை: வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணியிடம் சில்மிஷம் செய்த டாக்டருக்கு 3 ஆண்டு சிறை: வேலூர் கோர்ட்டு தீர்ப்பு

வேலூர், ஜூலை.6-


வேலூர் அடுத்த ஊசூர் கிராமத்தை சேர்ந்தவர் டாக்டர் விஜயராஜன். இவர் அங்கு கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 17.3.2009 அன்று விஜயராஜன் கிளினிக்குக்கு மருத்துவ பரிசோதனைக்காக 35 வயது மதிக்கத்தக்க ஒரு கர்ப்பிணி பெண் வந்தார். உடன் அவரது கணவரும் வந்திருந்தார்.

தனி அறையில் அந்த பெண்ணை விஜயராஜன் பரிசோதித்தார். வெளியே கணவர் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அந்த பெண்ணிடம் விஜயராஜன் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். உடனே விஜயராஜன் வெளியே சொன்னால் ஒழித்துவிடுவேன் என மிரட்டினாராம்.

இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் 4-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது.

விசாரணை முடிவடைந்ததை அடுத்து மாஜிஸ்திரேட் பாலமுருகன் நேற்று தீர்ப்பு அளித்தார். டாக்டர் விஜயராஜனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2500 அபராதமும் விதிக்கப்பட்டது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - வேலூர்

section1

வேலூரில் ரூ.5 லட்சம் கேட்டு வாலிபர் கடத்தல்: 10 பேர் கைது

வேலூர், பிப்.8–திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா காட்டுக்கானூர், ரெட்டிபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif