லண்டனில் பயிற்சியை தொடங்கினார் கிருஷ்ண பூனியா || london olympics practice started krishna punia
Logo
சென்னை 24-10-2014 (வெள்ளிக்கிழமை)
லண்டனில் பயிற்சியை தொடங்கினார் கிருஷ்ண பூனியா
லண்டனில் பயிற்சியை தொடங்கினார் கிருஷ்ண பூனியா
புதுடெல்லி, ஜூலை 6-

இந்தியாவின் முன்னணி வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ண பூனியா லண்டன் ஒலிம்பிக்கில் சாதிக்கும் கனவுடன் தயாராகி வருகிறார். கடந்த மூன்று மாதங்களாக அமெரிக்காவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தீவிர பயிற்சி பெற்ற 30 வயது கிருஷ்ண பூனியா, ஒலிம்பிக் போட்டிக்காக முன்கூட்டியே லண்டனை சென்றடைந்துள்ளார்.

லண்டனில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பல்நோக்கு வசதிகள் கொண்ட பாசில்டன் ஸ்போர்ட்டிங் கிராமத்தில் பயிற்சியை தொடங்கி உள்ளார். அவருடன் அவரது கணவரும், பயிற்சியாளரான வீரேந்தரும் சென்றுள்ளார். இது குறித்து பூனியா கூறுகையில்:

பயிற்சி திட்ட விவரங்களை ரொம்ப நாளைக்கு முன்பே விளையாட்டு அமைச்ககத்திடம் கொடுத்து விட்டோம். அப்போது எனக்குரிய போட்டிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே லண்டன் செல்ல விரும்புவதாக தெரிவித்திருந்தோம். அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் காலவேறுபாடு உள்ளது. எனவே இங்கிலாந்தில் உள்ள சூழலுக்கு ஏற்ப விரைவில் மாற்றிக்கொள்வது கடினம்.

இதனை கருத்தில் கொண்டு லண்டனுக்கு சீக்கிரம் செல்ல முடிவு செய்து, அதன்படி வந்துள்ளோம். நிறைய முன்னணி வீரர், வீராங்கனைகள் லண்டனுக்கு ஏற்கனவே வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் நான் மட்டுமே இந்தியன் என்றார்.

கிருஷ்ண பூனியா வட்டு எறிதல் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 64.74 மீட்டர் தூரம் வட்டு எறிந்திருக்கிறார். ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வட்டு எறிதல் ஆகஸ்டு 3 மற்றும் 4-ந்தேதிகளில் நடக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஆசிய பீச் விளையாட்டு: பயிற்சியாளர்களாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் நியமனம்

4-வது ஆசிய பீச் விளையாட்டு போட்டிகள் தாய்லாந்தில் உள்ள புகேட்டில் அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif