விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா, ராத்வன்ஸ்கா || wimbledon tennis serena enter final match
Logo
சென்னை 27-03-2015 (வெள்ளிக்கிழமை)
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா, ராத்வன்ஸ்கா
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா, ராத்வன்ஸ்கா
லண்டன், ஜூலை.6-
 
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தன.
 
முதலாவது அரைஇறுதியில் 3-ம் நிலை வீராங்கனை போலந்தின் அக்னீஸ்கா ராத்வன்ஸ்காவும், 8-ம் நிலை வீராங்கனை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும் பலப்பரீட்சை நடத்தினர்.
 
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராத்வன்ஸ்கா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கெர்பரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 23 வயதான ராத்வன்ஸ்கா, கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் 1939-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டியில் போலந்தின் ஜாட்விகா ஜெட்ஸிஜோவ்ஸ்கா தோல்வி அடைந்த பிறகு போலந்து வீராங்கனை ஒருவர் கிராண்ட்ஸ்லாம் இறுதிசுற்றுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
 
மற்றொரு அரைஇறுதியில் 4 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லயம்ஸ், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான பெலாரசின் விக்டோரியா அஸரென்காவுடன் மோதினார்.
 
இதில் முதல் செட்டை எளிதாக தனதாக்கிய செரீனாவுக்கு, 2-வது செட் டைபிரேக்கர் வரை நீடிக்கும் அளவுக்கு கடும் சவாலாக இருந்தது. என்றாலும் இறுதியில் இந்த செட்டும் அவரது வசம் ஆனது.
 
1 மணி 36 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் செரீனா 6-3, 7-6 (8-6) என்ற நேர் செட்டில் வெற்றியை சுவைத்து விம்பிள்டனில் 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
 
மணிக்கு அதிகபட்சமாக 120 மைல் வேகத்தில் சர்வீஸ் போட்டு அஸரென்காவை மிரட்டிய 30 வயதான செரீனா எதிராளி தொட முடியாத அளவுக்கு 24 'ஏஸ்' சர்வீஸ்களை வீசி பிரமிக்க வைத்தார். ஓர் ஆட்டத்தில் செரீனா வீசிய அதிகபட்ச ஏஸ் சர்வீஸ் இதுவாகும்.
 
நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் செரீனா-ராத்வன்ஸ்கா மோதுகிறார்கள். இருவரும் இதற்கு முன்பு சந்தித்த 2 ஆட்டங்களிலும் செரீனா வெற்றி பெற்றுள்ளார்.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

பெரிய மைதானம் என்ற கவலை இல்லை: ஹெய்டனுக்கு நியூசிலாந்து வீரர் சவுத்தி நறுக் பதில்

ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை மெல்மோர்ன் மைதானத்தில் போட்டிகளை நடத்தும் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நியூசிலாந்து இதுவரை ....»