5 நட்சத்திர ஓட்டல்களில் 24 மணி நேரம் மது அருந்த அனுமதி || 5 star hotel 24 hours bar permission
Logo
சென்னை 21-10-2014 (செவ்வாய்க்கிழமை)
5 நட்சத்திர ஓட்டல்களில் 24 மணி நேரம் மது அருந்த அனுமதி
5 நட்சத்திர ஓட்டல்களில் 24 மணி நேரம் மது அருந்த அனுமதி
சென்னை, ஜூலை.5-
 
தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அயல்நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகள் 5 நட்சத்திர ஓட்டல்கள் உள்பட மற்ற நட்சத்திர ஓட்டல்களில் தங்கி செல்கிறார்கள்.
 
நட்சத்திர ஓட்டல்களில் மது அருந்தும் பார் வசதி காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. பார் மற்றும் கிளப்புகளிலும் இந்த நேரத்தில் மட்டுமே மது அருந்த முடியும்.
 
நட்சத்திர ஓட்டல்களில் இரவு எந்நேரமும் அறை எடுக்கவும், அறையை காலி செய்ய வசதி இருப்பதால் நள்ளிரவில் வரும் விருந்தினர்களுக்கு மது அருந்த முடியாத நிலை உள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் அனைத்து வசதிகள் கிடைத்தாலும் மது விற்பனை மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அனுமதிப்பது இல்லை.
 
இதனால் ஓட்டல் தொழில் பாதிக்கப்படுவதாகவும் மது விற்பனை நேரத்தை நீட்டிப்பு செய்து தர வேண்டும் என்று நட்சத்திர ஓட்டல்கள் தரப்பில் அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை கட்டுப்பாட்டில் இயங்கும் நட்சத்திர ஓட்டல்கள், பார்கள், கிளப்புகள் போன்றவற்றின் மது விற்பனை நேரத்தை அதிகரிக்க துறை முடிவு செய்துள்ளது.
 
ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் மது விற்க அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக அத்தகைய ஓட்டல்களில் லைசென்சு கட்டணத்தை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
 
5 நட்சத்திர ஓட்டல்கள் 24 மணி நேரமும் பார் நடத்த ரூ.12 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும். ஒரு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முன்பணமாக செலுத்தி வந்த ஓட்டல்கள் இனி ரூ.16 லட்சம் செலுத்த வேண்டும்.
 
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 
நட்சத்திர ஓட்டல்களில் பார் நேரம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இல்லை. அதனால் அவற்றை நீட்டித்து தரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து பரிசீலிக்கப்பட்டது. ஓட்டல்கள் செலுத்த வேண்டிய தொகையை உடனே செலுத்தி அனுமதியை பெற்றுக் கொண்டு பார்களை புதிய நேரத்தில் நடத்தி கொள்ளலாம். 5 நட்சத்திர ஓட்டல்களுக்கு 24 மணி நேரமும் பார் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
4 நட்சத்திர, 3 நட்சத்திர, ஒரு நட்சத்திர ஓட்டல்களில் முன்பணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண ஓட்டல் மற்றும் ஒரு நட்சத்திர ஓட்டல்கள், கிளப் போன்றவைகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றில் பார் செயல்படும் நேரம் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.
 
தமிழகம் முழுவதும் 700 ஓட்டல்கள் (5 நட்சத்திர உள்பட) பார்கள், கிளப்புகள் செயல்படுகின்றன. சென்னையில் மட்டும் 190 ஓட்டல் பார்களில் மது விற்பனை செய்யப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

தமிழகத்தில் தொடரும் மழை: அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கு தமிழக அரசு உஷார் நிலை

தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் பரவலாக மழை தொடர்ந்து பெய்வதால், இயற்கை அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கு தமிழக அரசு ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif