தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் கியாஸ் சிலிண்டர், ஸ்டவ் வெடித்து 586 பெண்கள் பலி || tamilnadu last year gas cylinder blast 586 womens dead
Logo
சென்னை 25-11-2014 (செவ்வாய்க்கிழமை)
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் கியாஸ் சிலிண்டர், ஸ்டவ் வெடித்து 586 பெண்கள் பலி
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் கியாஸ் சிலிண்டர், ஸ்டவ் வெடித்து 586 பெண்கள் பலி
சென்னை, ஜூலை 5-

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பலியாவோரில் தமிழகம் இரண்டாவது இடம் வகிக்கிறது. வீட்டு சமையல் அறையில் பயன்படுத்தப்படும், எரிவாயு சிலிண்டர், கியாஸ் ஸ்டவ் ஆகியவை பல நேரங்களில் எமனாக மாறி விடுகின்றன. அவ்வப்போது உயிர்களை பலிவாங்கி விடுகின்றன.

அந்த வகையில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இது தொடர்பாக, தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வருமாறு:-

கியாஸ் ஸ்டவ் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தும், கியாஸ் கசிவினால் ஏற்படும் தீ விபத்திலும் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்தபடி செல்கிறது. பல வழிகளில் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனாலும், விபத்துகள் குறைந்த பாடில்லை. கடந்த ஆண்டில் குஜராத்தில் ஸ்டவ் வெடித்தும், எரிவாயு சிலிண்டர் வெடித்தும் பாதிக்கப்பட்டவர்கள் 762 பேர். இவர்களில் 735 பேர் பலியாகி விட்டனர்.

தமிழகத்தில் 632 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் 586 பேர் இறந்து போயினர். மராட்டியத்தில் 541 பேரும், ஆந்திராவில் 426 பேரும், கர்நாடகத்தில் 386 பேரும் பலியாகி உள்ளனர். கேரளாவில் மட்டுமே இதன் எண்ணிக்கை குறைவாக (52 பேர்) உள்ளது.

ஸ்டவ் வெடித்தும், எரிவாயு சிலிண்டர் வெடித்தும் உடல் கருகி பலியானவர்களில் 82 சதவிகிதம் பேர் பெண்கள் ஆவர். சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் மூலம் 96 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 91 பேர் இறந்து விட்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணி அறிவிப்பு

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி புவனேஷ்வரில் டிசம்பர் 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ....»