சச்சின் இனி டெஸ்ட் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்துவார்: ஸ்ரீகாந்த் || Tendulkar will focus on Tests in a big way
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
சச்சின் இனி டெஸ்ட் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்துவார்: ஸ்ரீகாந்த்
சச்சின் இனி டெஸ்ட் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்துவார்: ஸ்ரீகாந்த்
மும்பை,ஜூலை.5-
 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர் இடம்பெறவில்லை.
 
சீனியர் வீரரான சச்சின் டெஸ்ட் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்துவதற்காகவே ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்து விலகியுள்ளார் என தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து பேசிய ஸ்ரீகாந்த், ‘சச்சின் நியூசிலாந்து தொடருக்கான அணியில் இடம்பெறுவார். அவர் இன்னும் சிலகாலம் விளையாட விரும்புகிறார். அதற்காக அவர் டெஸ்ட் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளார். எனவே அடுத்துவர உள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் ஆடுவதே அவரது குறிக்கோளாக இருக்கும்’ என்றார்.
 
புற்றுநோய் சிகிச்சை பெற்று திரும்பியுள்ள யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் எதிர்காலம் பற்றி கேட்டபோது, ‘யுவராஜ் இந்தியாவுக்காக உலக கோப்பையை வென்றுள்ளார். எனவே அவர் தயாரானால் அவருக்கு அணியில் எப்போதும் இடமுண்டு. யுவராஜ் பயிற்சியில் ஈடுபட்டு வருவது அவரது நேர்மறையான மனநிலையைக் காட்டுகிறது’ என ஸ்ரீகாந்த் பதிலளித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif