ஒத்தக்கடை அருகே இன்று கல்குவாரி தண்ணீரில் முழ்கி 2 மாணவர்கள் பலி: குளிக்க சென்றபோது பரிதாபம் || ottakkatai near kalkuvari water mulki students dead today awful bath
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
ஒத்தக்கடை அருகே இன்று கல்குவாரி தண்ணீரில் முழ்கி 2 மாணவர்கள் பலி: குளிக்க சென்றபோது பரிதாபம்
ஒத்தக்கடை அருகே இன்று கல்குவாரி தண்ணீரில் முழ்கி 2 மாணவர்கள் பலி:
குளிக்க சென்றபோது பரிதாபம்
மேலூர், ஜூலை. 4-
 
மதுரை மாவட்டம், மேலூர் ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அய்யப்பன் (வயது12). இவர் அழகர் கோவிலில் உள்ள மன வளர்ச்சி பள்ளியில் படித்து வந்தார்.
 
இவரது வீட்டிற்கு பொள்ளாச்சியில் வசிக்கும் சித்தி மகன் விஷ்ணு (வயது17) என்பவர் வந்திருந்தார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.இந்நிலையில் இன்று காலை அய்யப்பனும், விஷ்ணுவும் அருகில் உள்ள கல்குவாரி தண்ணீரில் குளிக்க சென்றனர்.
 
2 பேரும் கல்குவாரி தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக அய்யப்பனும், விஷ்ணுவும் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கினர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் முழ்கினர்.
அப்போது அவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே விஷ்ணு பரிதாபமாக இறந்தார். அய்யப்பன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தான். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜா வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மதுரை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif