கடையநல்லூரில் ஒரே நாளில் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி:டெங்குவை தொடர்ந்து வாந்தி பேதி பாதிப்பு || kadayyanallur one day seventys people admit the hospital dengu start vomite enterorrhoea impact
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
கடையநல்லூரில் ஒரே நாளில் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி:டெங்குவை தொடர்ந்து வாந்தி-பேதி பாதிப்பு
கடையநல்லூரில் ஒரே நாளில் 70 பேர்
ஆஸ்பத்திரியில் அனுமதி:டெங்குவை தொடர்ந்து வாந்தி-பேதி பாதிப்பு
கடையநல்லூர், ஜூலை. 4-
 
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம், ரகுமானியபுரம், முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு தீடீரென வாந்தி பேதி ஏற்பட்டது. இதனால் பலர் தென்காசி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
முத்துபேச்சு, கிருஷ்ணம்மாள், கோவிந்தம்மாள், ஜீவா, வெள்ளத்தாய், மும்தாஜ், காந்தா , கல்யாணி, சுப்பம்மாள், கிருஷ்ணவேணி, மாலதி, சுகின், சுப்புலட்சுமி, மாசானம், குமார், கிருஷணம்மாள், கார்த்திகேயன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது கடையநல்லுலூர் மக்களிடையே மேலும் பீதீயை ஏற்படுத்தியுள்ளது. வாந்தி பேதி காரணமாக கடையநல்லூர் பகுதியில் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருநெல்வேலி