நாமக்கல்லில் கடன் பணத்தை தராததால் வீட்டில் அடைத்து வைத்து கொடுமை: போலீசார் அதிரடி நடவடிக்கையால் அரசு ஊழியர்கள் 2 பேர் கைது || Namakkal have enough money keep home closing loan government employees arrested police action
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
நாமக்கல்லில் கடன் பணத்தை தராததால் வீட்டில் அடைத்து வைத்து கொடுமை: போலீசார் அதிரடி நடவடிக்கையால் அரசு ஊழியர்கள் 2 பேர் கைது
நாமக்கல்லில் கடன் பணத்தை தராததால் வீட்டில் அடைத்து வைத்து கொடுமை: போலீசார் அதிரடி நடவடிக்கையால் அரசு ஊழியர்கள் 2 பேர் கைது
நாமக்கல், ஜூலை 3-
 
நாமக்கல் நடராஜபுரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 42). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரோஜா (40). ராசிபுரம் கோர்ட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.மோகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை காந்திபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (45) என்பவரிடம் பனியன் நூல் தயாரிப்பு எந்திரத்தை ரூ. 2 லட்சத்திற்கு வாங்கினார்.
 
பின்னர் அந்த எந்திரம் பழுதானதால் அதனை மோகன் திருப்பி கொடுத்து விட்டார். இதனால் பணத்தை திருப்பி கொடுத்த ராஜேந்திரன் ரூ. 25 ஆயிரம் மட்டும் கொடுக்கவில்லை.
 
பணத்தை பல முறை கேட்டும் ராஜேந்திரன் கொடுக்காமல் இழுத்தடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மோகன் கடந்த 26-ந்தேதி ராஜேந்திரன் வீட்டிற்கு சென்றார். உடன் தனது உறவினர் நேசமணி என்பவரையும் அழைத்து சென்றார். அப்போது பணம் கேட்டும் கொடுக்காததால் ராஜேந்திரனை நைசாக பேசி நாமக்கல் நடராஜபுரத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை மோகன் தனது வீட்டின் தனி அறையில் வைத்து பூட்டி வைத்தார்.
 
தினமும் மோகன், சரோஜா ஆகியோர் வேலைக்கு செல்லும் போது ராஜேந்திரனை வீட்டில் வைத்து பூட்டி விட்டு சென்றனர். மாலையில் மோகன் வேலை முடிந்து வந்ததும் ராஜேந்திரனை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு நாமக்கல்லை வலம் வருவார்.
 
இவ்வாறு கடந்த 4 நாட்களாக ராஜேந்திரன் அடைபட்டு கிடந்தார். அவருக்கு தினமும் சாப்பாடு பாத்திரத்தில் வைக்கப்படும். ஆனால் சிறுநீர் கழிக்க கூட வெளியே செல்ல கூடாது என்பதால் அதற்கு உள்ளேயே பிளாஸ்டிக் பாத்திரம் வைத்து இருந்தனர்.
 
தினமும் அவதிபட்டு வந்த ராஜேந்திரன் சிறை வைக்கப்பட்டு இருந்த தனி அறையில் இருந்த போன் மூலம் உறவினரிடம் பேசினார். ரூ.25 ஆயிரம் கொடுக்காததால் மோகன் வீட்டில் சிறை வைக்கப்பட்டு உள்ளேன். தன்னை உடனே மீட்டு கோவைக்கு அழைத்து செல்லவேண்டும்  என்று கூறினார்.
 
இதனால் இதுபற்றி ராஜேந்திரன் உறவினர்கள் நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டிற்கு தகவல் கொடுத்தனர். அவர் நாமக்கல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டதை அடுத்து, நேற்று மாலை ராஜேந்திரன் சிறை வைக்கப்பட்டு இருந்த வீட்டிற்கு போலீசார் சென்றனர்.
 
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தனி அறையில் ராஜேந்திரன் இருந்ததை பார்த்தனர். ராஜேந்திரனை மீட்டு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
 
இதற்கிடையே மாலையில்  பணி முடிந்து வீட்டிற்கு வந்த மோகன், சரோஜா ஆகியோரை ராஜேந்திரனை கடத்தி சிறை வைத்த குற்றத்திற்காக கைது செய்தனர். ராஜேந்திரனை கடத்தி வந்ததில் தொடர்புடைய நேசமணி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - நாமக்கல்

MudaliyarMatrimony_300x100px.gif