வழக்குகளை சந்திக்க தி.மு.க.வினர் தயார்: மாவட்ட செயலாளர் மூர்த்தி பேச்சு || cases meet ready face district secretary murthy talks
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
வழக்குகளை சந்திக்க தி.மு.க.வினர் தயார்: மாவட்ட செயலாளர் மூர்த்தி பேச்சு
வழக்குகளை சந்திக்க தி.மு.க.வினர் தயார்: மாவட்ட செயலாளர் மூர்த்தி பேச்சு
மதுரை, ஜூலை.2-
 
மதுரை கிழக்கு தொகுதி தி.மு.க. சார்பாக ஆனையூரில் பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் டி.பொம்மதேவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி பேசியதாவது:-
 
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்தன. ஆனால் அதே திட்டத்தை அ.தி.மு.க.வினர் 2-வது முறையாக அடிக்கல் நாட்டி, இந்த திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக பொதுமக்களிடம் கூறி வருகின்றனர்.
 
தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகளை போட்டு கைது செய்ய எங்களை தேடி வர வேண்டாம். வருகிற 4-ந் தேதி நாங்களே உங்களை தேடி வருகிறோம். எத்தனை வழக்குகள் எங்கள் மீது போட்டாலும் அதனை சந்திக்க தயார்.இவ்வாறு அவர் பேசினார்.
 
முன்னதாக தலைமைக் கழகப் பேச்சாளர் ஆலந்தூர் பாரதி, முன்னாள் அமைச்சர் தமிழரசி, அவைத்தலைவர் மா.அருணாச்சலம், மாவட்ட பொருளாளர் கண்ணன், எஸ்ஸார் கோபி, முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்திர பாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
 
மேற்கு ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன், ஆனையூர் நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் கராத்தே சிவா, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ்கண்ணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் வக்கீல் ஜீவானந்தம், சசிக்குமார், செங்கிஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மதுரை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif