குழந்தைகளுக்காகத்தான் நயன்தாரவை விட்டு விலகினேன்: பிரபுதேவா || Prabhudeva says my childers fututre is important for me
Logo
சென்னை 02-04-2015 (வியாழக்கிழமை)
குழந்தைகளுக்காகத்தான் நயன்தாரவை விட்டு விலகினேன்: பிரபுதேவா
குழந்தைகளுக்காகத்தான் நயன்தாரவை விட்டு விலகினேன்: பிரபுதேவா
காதலன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய பிரபுதேவா, நடன இயக்குனர், இயக்குனர் என பல துறைகளில் முத்திரை பதித்தவர் ஆவார். இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் காதல் ஏற்படவே, தனது முதல் மனைவியான ரமலத்தை பல லட்சம் ரூபாய் செலவு செய்து விவாகரத்து செய்தார்.
கிறிஸ்தவரான டயானா மரியம் குரியன் என்கிற நயன்தாரா, பிரபுதேவாவிற்காக இந்து மதத்திற்கு மாறினார். மேலும் தனது கையில் பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்திக் கொண்டார். மேலும் சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
 
இருவரும் திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேற திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இருவரும் திடீரென்று பிரிந்தனர். சினிமாவில் நடிக்காமல் இருந்த நயன்தாரா, பிரிவிற்குப் பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
 
பிரிவு குறித்து இரண்டு தரப்பிலும் மௌனமே சாதித்து வந்தனர். தற்போது முதன் முறையாக பிரபுதேவா தனது மௌனத்தை கலைத்துள்ளார். நயன்தாராவை பிரிந்தது குறித்து கேட்டதற்கு "எனது குழந்தைகளின் எதிர்காலம் தான் எனக்கு முக்கியம். அவர்களுக்காக எதையும் இழப்பேன்" என்று பதிலளித்துள்ளார்.
 
இதன் மூலம், ரமலத்துடன் விவாகரத்தான பிறகும், அவரது பிள்ளைகளுடன் பிரபுதேவா அதிக நேரம் செலவழித்தது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. இதுவே இவர்களது பிரிவுக்கு காரணம் என்பது உண்மையாகியுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

section1

நண்பேன்டா படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்காததை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தனது ரெட் ஜெயண்ட் மூவி மேக்கர்ஸ் பட ....»