ஆதாயம் பெறும் பதவியிலுள்ள பிரணாப்பின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்: சங்மா || pranab mukherjee candidacy petition sangma
Logo
சென்னை 22-12-2014 (திங்கட்கிழமை)
ஆதாயம் பெறும் பதவியிலுள்ள பிரணாப்பின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்: சங்மா
ஆதாயம் பெறும் பதவியிலுள்ள பிரணாப்பின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்: சங்மா
புதுடெல்லி,ஜூலை.2-

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி, ஆதாயம் பெறும் பதவியான இந்திய புள்ளியியல் துறையின் தலைவராகப் பதவி வகித்து வருவதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டுமென தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பி.ஏ.சங்மா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிக்கு சங்மாவின் வழக்கறிஞர் எழுதியுள்ள கடிதத்தில், 'பிரணாப் இந்திய புள்ளியியல் துறையின் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். எனவே ஆதாயம் பெறும் பதவி விதிகளின்படி அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இயலாது’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை இன்றுடன் முடிகிறது. வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற வரும் 4-ம் தேதி கடைசி நாளாகும். இதற்கு முன்பு, கடந்த 2006-ம் ஆண்டு எம்.பி பதவி மற்றும் தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் ஆகிய இருபதவிகளை சோனியா காந்தி வகித்து வந்தபோது இதே பிரச்சினை எழுந்ததால், அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கொள்கை பரப்பு செயலாளர் ஆகிறார் பிரியங்கா: காங்கிரஸ் மேலிடம் முடிவு

புதுடெல்லி, டிச. 22–பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.சோனியாகாந்தி போட்டியிட்ட ரேபரேலி, ராகுல்காந்தி நின்ற ....»