அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமணம் நடத்த அனுமதிக்க கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு || not allow marriage Anna Centenary Library high court order
Logo
சென்னை 15-02-2016 (திங்கட்கிழமை)
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமணம் நடத்த அனுமதிக்க கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமணம் நடத்த அனுமதிக்க கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, ஜூலை. 2-

சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. இதை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.

இதை எதிர்த்து வக்கீல்கள் வீரமணி, பாஸ்கர் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தடைவிதித்தனர். மேலும் நூலகம் செயல்படுவதற்கு தேவையான வசதிகளை குறைக்ககூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இன்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் டிவிசன் பெஞ்ச் முன்பு, மூத்த வக்கீல் டி.வில்சன் ஆஜராகி, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகி இருப்பதாக முறையிட்டார்.

அப்போது நீதிபதிகள் அரசு வக்கீல் வெங்கடேசனிடம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருமணம் நடத்த எப்படி அனுமதித்தீர்கள்? என்று கேட்டார்.

அப்போது வக்கீல் வில்சன் கூறும்போது, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருமணம் நடத்த அனுமதி கிடையாது. 2 நாட்களுக்கு முன்பு அங்கு நடந்த திருமண நிகழ்ச்சியின்போது நூலகத்திற்கு வந்த வாசகர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அந்த நூலகத்தின் வசதிகளை குறைக்ககூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை அரசு மீறி உள்ளது என்றார்.

அதற்கு அரசு வக்கீல் வெங்கடேசன் பதில் அளித்து பேசும்போது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இனி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கமாட்டோம். நூலக வசதிகள் எதுவும் குறைக்கப்படவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நூலகத்திற்கு வந்த வாசகர்கள் தடுக்கவில்லை. இனிமேல் இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தர மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, இனிமேல் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது. நடந்த சம்பவம் குறித்து அரசு மனுதாக்கல் செய்ய வேண்டும் அதன்மீது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif