மதுரையில் 10 க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை மாற்றி ஆசிரியை, பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய மாணவர் கைது || madurai sim card change teacher lady sms send student arrest
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
மதுரையில் 10-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை மாற்றி ஆசிரியை, பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய மாணவர் கைது
மதுரையில் 10-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை மாற்றி ஆசிரியை, பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய மாணவர் கைது
மதுரை, ஜூலை 2-

மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியையாக இருப்பவர் வசந்தா. (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார்.

அந்த மனுவில், தனது செல்போனுக்கு ஒருவர் தொடர்ந்து போன் செய்து ஆபாசமாக பேசியும், ஆபாசமான எஸ்.எம்.எஸ். அனுப்பியும் பாலியல் ரீதியான தொந்தரவு செய்து வருகிறார். எனவே அந்த நபரை கண்டுபிடித்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுமதி, ஆனந்தசுந்தரி, முதுநிலை காவலர்கள் தங்கம், தினகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் ஆசிரியை உள்பட பல்வேறு பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதுடன் பெண்களை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தெற்குவாசல் பகுதியை சேர்ந்த குமரன்பாபு என்பவரது மகன் மணிகண்டன் (வயது18) என்பது தெரிய வந்தது. அவர் தற்போது நடந்த பிளஸ்-2 தேர்வில் 1,100 மதிபெண் எடுத்து இருந்ததும் தெரியவந்தது.

மாணவர் மணிகண்டன் செல்போனில் இருந்து ஏராளமான பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதும், ஒரே செல்போனில் 10-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை மாற்றி, மாற்றி பயன்படுத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 2 செல்போன்கள், 9 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் மணிகண்டன் விரைவில் நடைபெற உள்ள என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்கு பின்னர் மணிகண்டனை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆசிரியைக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி பிளஸ்-2 மாணவர் கைதான சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மதுரை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif