யூரோ கால்பந்து துளிகள்... || euro football 2012 tips
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
யூரோ கால்பந்து துளிகள்...
யூரோ கால்பந்து துளிகள்...
இறுதிப் போட்டியில் மிகப்பெரிய வெற்றி
 
யூரோ கோப்பை வரலாற்றில் ஸ்பெயின் அணி இறுதிப் போட்டியில் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும். அந்த அணி 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. இதற்கு முன்பு 1972-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் மேற்கு ஜெர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் சோவியத் யூனியனை வீழ்த்தியதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.
 
ஐரோப்பிய கோப்பையை வென்ற நாடுகள்
 
1960: சோவியத் யூனியன்; 1964: ஸ்பெயின்; 1968: இத்தாலி; 1972: மேற்கு ஜெர்மனி; 1976: செக்கசுலோவாக்கியா; 1980: மேற்கு ஜெர்மனி; 1984: பிரான்ஸ்; 1988: நெதர்லாந்து; 1992: டென்மார்க்; 1996: ஜெர்மனி; 2000: பிரான்ஸ்; 2004: கிரீஸ்; 2008: ஸ்பெயின்; 2012: ஸ்பெயின்
 
சென்னை மீனின் கணிப்பு பலித்தது
 
யூரோ கோப்பையை கைப்பற்றுவது ஸ்பெயின் அணியா? இத்தாலியா என்று உலகம் முழுவதும் பல்வேறு விதங்களில் கணிக்கப்பட்டது. சென்னை அண்ணாநகரில் உள்ள சாணக்யா என்று பெயர் சூட்டப்பட்ட மீன் ஸ்பெயின் வெற்றி பெறும் வகையில் அந்நாட்டு கொடியை 3 முறை கடித்தது. தற்போது ஸ்பெயின் வெற்றி பெற்றுள்ளதால் மீனின் கணிப்பு பலித்துள்ளது.
 
அதிக கோல் பட்டியலில் 6 வீரர்கள்
 
14-வது ஐரோப்பிய கால்பந்து போட்டியில் அதிக பட்சமாக 3 கோல் (தனி வீரர்) அடிக்கப்பட்டது. 6 வீரர்கள் 3 கோல்கள் அடித்து உள்ளனர். அவர்கள் பெயர் விவரம்:-
 
பெர்னாண்டோ டொரஸ் (ஸ்பெயின்), ஆலன் டிசாக் கோவ் (ரஷியா), மேரியோ மேண்டுஜின் (குரோஷியா), மேரியோ கோம்ஸ் (ஜெர்மனி), மேரியோ பலோடெலி (இத்தாலி), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்).
 
ஸ்பெயின் அணிக்கு ரூ.160 கோடி பரிசு
 
ஐரோப்பிய கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு ரூ.160 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டது.  2-வது இடத்தை பிடித்த இத்தாலி அணிக்கு ரூ.135 கோடி கிடைத்தது. அரை இறுதியில் தோல்வி அடைந்த ஜெர்மனி அணிக்கு ரூ.111 கோடியும், போர்ச்சுக்கல் அணிக்கு ரூ.104 கோடியும் கிடைத்தன. கால்இறுதியில் தோற்ற இங்கிலாந்துக்கு ரூ.86 கோடியும், செக்குடியரசுக்கு ரூ.83 கோடியும், பிரான்ஸ் கிரீஸ் அணிகளுக்கு தலா ரூ.80 கோடியும் கிடைத்தன. மொத்தம் ரூ.1364 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
 
2016-ம் ஆண்டு பிரான்சில் அடுத்த யூரோ போட்டி
 
கால்பந்தில் 2-வது மிகப்பெரிய போட்டியான யூரோ கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 14-வது ஐரோப்பிய போட்டி போலந்து, உக்ரைனில் தற்போது நடந்து முடிந்தது. 2016-ம் ஆண்டுக்கான 15-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடத்தப்படுகிறது. இதில் 24 அணிகள் பங்கேற்கின்றன. தற்போது முடிந்த போட்டியில் இருந்து கூடுதலாக 8 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 10 இடங்களில் போட்டி நடக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் ஆலோசகராக நீல் மெக்கென்சி நியமனம்

இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif