தஞ்சையில் தினமும் தொடரும் சம்பவம்: பெண் மருந்தாளுனரிடம் 2 பவுன் நகை பறிப்பு மோட்டார் சைக்கிள் வாலிபர்கள் கைவரிசை || tanjai daily chain snatchin news public people sad
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
தஞ்சையில் தினமும் தொடரும் சம்பவம்: பெண் மருந்தாளுனரிடம் 2 பவுன் நகை பறிப்பு- மோட்டார் சைக்கிள் வாலிபர்கள் கைவரிசை
தஞ்சையில் தினமும் தொடரும் சம்பவம்: பெண் மருந்தாளுனரிடம் 2 பவுன் நகை பறிப்பு- மோட்டார் சைக்கிள் வாலிபர்கள் கைவரிசை
தஞ்சாவூர்.ஜூலை.1-
 
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே யுள்ள வாட்டாத்தி கோட்டை பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகள் சத்யபாமா(வயது 24). இவர் தஞ்சை வ.உ.சி. நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக வேலை பார்த்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து ஊருக்கு செல்ல சத்யபாமா அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 2 வாலிபர்கள் திடீரென சத்யபாமா கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும்.
 
இதுபற்றி தஞ்சை தெற்கு போலீசில் சத்யபாமா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 
தஞ்சை நகரில் கடந்த ஒரு வாரமாக தினமும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்து வருகிறது. மோட்டார் சைக்கிளில் வரும் வாலிபர்கள் தொடர்ந்து துணிச்சலாக கைவரிசை காட்டி வருகின்றனர்.
 
இதுவரை நகை பறிப்பு வழக்கில் கொள்ளையர்கள் பிடிபட வில்லை. இதனால் போலீசார் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத் த வேண்டும் என்று தஞ்சை நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தஞ்சாவூர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif