கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு || loan matter sickle cut to lady
Logo
சென்னை 05-07-2015 (ஞாயிற்றுக்கிழமை)
கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
திருவாரூர்,ஜூலை.1-
 
திருவாரூர் அடுத்த காட்டூர் பகுதி விளாகத்தைச் சேர்ந்தவர் சகுந்தலா (வயது 42) . இவர் தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த பாரதி (37) என்பவரிடம் பண உதவி கேட்டார். இதையொட்டி அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் பாரதிக்கு ஆதரவாக சங்கர் (24), மதியழகன் (40), ஆகியோர் சகுந்தலாவை மிரட்டினார்கள்.  பின்னர் ஆத்திரத்தில் அவர்கள் சகுந்தலாவை அரிவாளால் வெட்டினார்கள்.
 
இதில் படுகாயம் அடைந்த சகுந்தலா திருவாரூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருவாரூர் தாலுக்கா போலீசில் சகுந்தலா கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து பாரதி, சங்கர், மதியழகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருவாரூர்

section1

இன்று இரவு குருபெயர்ச்சி: ஆலங்குடி–திட்டையில் பக்தர்கள் குவிந்தனர்

வலங்கைமான், ஜூலை. 5–திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்குரிய பரிகார ....»