மன்னார்குடி, நீடாமங்கலத்தில் புதிய கோர்ட் கட்டிடங்கள் விரைவில் கட்டப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு || mannargudi needamangalam news court work finished soon minister
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
மன்னார்குடி, நீடாமங்கலத்தில் புதிய கோர்ட் கட்டிடங்கள் விரைவில் கட்டப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
மன்னார்குடி, நீடாமங்கலத்தில் புதிய கோர்ட் கட்டிடங்கள் விரைவில் கட்டப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
திருவாரூர், ஜூலை.1-
 
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.10 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.
 
மாவட்ட செசன்ஸ் நீதிபதி எஸ்.இளங்கோ வரவேற்றார். பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் (கட்டிடம்) டி.ரத்தினவேல் திட்ட அறிக்கை வாசித்தார்.
 
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.யூசுப் இக்பால் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
தமிழ்மொழி மிகவும் பழமைவாய்ந்தது. சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை நான் நேசிக்கிறேன். தமிழில் பேசவே ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு தமிழ் முழுமையாக பேசத்தெரியாது. திருவாரூர் மண் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த மண்ணில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
 
இது விவசாயம் சார்ந்த பகுதியாகும். அமைதியான மக்கள் வாழ்கிறார்கள். மக்கள் தேவைகளை நிச்சயம் நீதிமன்றம் நிறை வேற்றித்தரும். இங்கு எல்லோரும் வாழ்த்து தெரிவித்தார்கள். யாரையும் வாழ்த்த வேண்டியதில்லை. ஏனென்றால் அவரவர் கடமையைத்தான் அவரவர்கள் செய்கிறார்கள்.
பல அரசுகள் நீதித்துறையை கண்டுகொள்வதில்லை. ஆனால் பல அரசுகள் நீதித்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
 
கடந்த 2 ஆண்டுகளில் பல இடங்களில் நீதிமன்ற கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது.  அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையே சில அதிகாரிகள் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார்கள். இப்பிரச்சினையில் அரசு தலையிட்டு தீர்க்க வேண்டும். வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடக்கூடாது.
 
திருவாரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் புறக்கணிப்பில் ஈடுபடுவதில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால் பாதிப்படைவது மக்கள் மற்றும் சமுதாயம்தான். மக்களுக்கு சரியான நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும். அதற்கு வக்கீல்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-
 
திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான், மன்னார்குடி, நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் புதிய நீதிமன்றக்கட்டிடங்கள் விரைவில் கட்டப்படும். மத்திய அரசின் 13-வது நிதிக்குழு மூலம் உரிய நிதி இதுவரை தமிழக அரசுக்கு வரவில்லை. நிதி கிடைத்தவுடன் புதிய கட்டிடப் பணிகள் தொடங்கப்படும்.
 
நீதித்துறையின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றி வருகிறது. 49 விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நில அபகரிப்புக்கு என 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வாணையம் மூலமே நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
ஆனால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தினை ஏற்ற முதல்-அமைச்சர், உயர்நீதிமன்றம் மூலமாகவே நீதிபதிகளை தேர்வு செய்ய அனுமதி அளித்தார். தற்போது 185 நீதிபதிகள் உயர்நீதிமன்றம் மூலமாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
பழமையான நீதிமன்றங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த னர். இதனை ஏற்ற தமிழக முதல்-அமைச்சர் சென்னை உயர்நீதிமன்றம் உள்பட 5 நீதிமன்றங்களை புணரமைப்பு பாதுகாத்திட ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ், ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, சி.டி.செல்வம், ஆந்திர மாநில ஐகோர்ட்டு நீதிபதி ராஜ.இளங்கோ, அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீத கிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் சி.நடராசன், தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தலைவர் டி.செல்வம், திருவாரூர் வழக்கறிஞர் சங்கத்தலைவர் ஜி.கோபாலகிருஷ்ணன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.ஜீவக்கனி, திருவாரூர் நகரசபைத்தலைவர் வி.ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர் ஆர்.டி.மூர்த்தி, கல்விப்புரவலர் பி.கே.யு. மணிகண்டன், சி.பி.ஜி.அன்பு, ஒன்றியக்குழுத்தலைவர் மலர்மணிகண்டன், ஒன்றியக்குழு துணைத்தலை வர் எஸ்.சிவசுப்பிரமணியன், தொழிலதிபர் நெம்மேலி பி.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
முடிவில் முதன்மை குற்றவி யல் நீதிபதி ஆர்.பத்மநாபன் நன்றி கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருவாரூர்

section1

வெள்ளபாதிப்பு குறித்து முழுமையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்: ராமதாஸ் பேட்டி

திருவாரூர், நவ.28–திருவாரூரில் பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் ....»