அவினாசி புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கம்: கருப்பசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் || avinashi new way bus start karuppasamy MLA
Logo
சென்னை 29-05-2015 (வெள்ளிக்கிழமை)
அவினாசி புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கம்: கருப்பசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
அவினாசி புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கம்: கருப்பசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
அவினாசி, ஜூலை. 1-

அவினாசி- அன்னூர், திருப்பூர்- புளியம்பட்டி, அன்னூர்-புளியம்பட்டி, திருப்பூர்-நம்பியூர் ஆகிய வழித்தடங்களில் டவுன் பஸ் வசதி வேண்டும் என்று அவினாசி எம்.எல்.ஏ. கருப்பசாமியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. கருப்பசாமி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி நான்கு புதிய வழித்தட பஸ்கள் தொடக்க விழா அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே நடந்தது.

முன்னதாக நான்கு பஸ்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ. கருப்பசாமி புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவினாசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பத்மநந்தினி, அன்னூர் ஒன்றிய தலைவி கண்ணம்மாள், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், நகர செயலாளர்கள் ராமசாமி (அவினாசி), சவுகத்பாய் (அன்னூர்), அல்லப்பாளையம் ஊராட்சி தலைவர் வெங்கிடுபதி, சி.டி.சி. ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் காளிமுத்து, தாசில்தார் பூங்காவன், போக்குவரத்து (கோவை) கோட்ட மேலாளர் முத்துசாமி, துணை மேலாளர் ராஜமாணிக்கம் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - கோவை

section1

குடும்ப தகராறில் விஷம் குடித்து கணவர் தற்கொலை

கோவை அன்னூர் குரும்ப பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 36). இவரது மனைவி ஈஸ்வரி (32). ....»

MM-TRC-Set2-B.gif