எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க இந்தியா வந்தது பாகிஸ்தான் குழு || Pak Rangers team arrives talks with BSF from tomorrow
Logo
சென்னை 27-11-2014 (வியாழக்கிழமை)
  • சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி ஒருவர் பலி
  • நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்
  • தலையில் பலத்த காயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுக்ஸ் உயிரிழப்பு
எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க இந்தியா வந்தது பாகிஸ்தான் குழு
எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க இந்தியா வந்தது பாகிஸ்தான் குழு
புதுடெல்லி,ஜூலை.1-  
 
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பிரச்சினை குறித்து கலந்தாலோசிப்பதற்காக பாகிஸ்தான் துணை ராணுவப்படை தலைவர் தலைமையிலான 18 உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்று இந்தியா வந்தடைந்தது. இன்று முதல் 5-ம் தேதி வரை டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரை சந்தித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.  
 
துணை ராணுவப்படை தலைவர் ஜெனரல் ரிஸ்வான் அக்தர் தலைமையிலான 18 உறுப்பினர்கள் அடங்கிய அக்குழுவினரை, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் பன்சால் மற்றும் மூத்த அதிகாரிகள் வாகா எல்லையில் வரவேற்றனர்.  பாகிஸ்தான் துணை ராணுவப்படை, ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு துறை,  உள்துறை அமைச்சகம் மற்றும் போதை எதிர்ப்பு படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.  
 
இரு நாடுகளும் இணைந்து பொது பிரச்சினைகளை எதிர்கொள்வது மற்றும் எல்லையில் அமைதி ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.   நாடுகளுக்கிடையே நடக்கும் கடத்தல்கள், துப்பாக்கிசூடுகள், இந்தியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகள் விவகாரம் போன்றவையும் விவாதத்தில் முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் போதை மருந்து கடத்தலை தடுப்பது தொடர்பாக இருநாட்டு போதை எதிர்ப்பு படையினரும் இணைந்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

உ.பி.யில் இரு சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பதான் கிராமத்தில் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை ....»