ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க இஸ்ரோ திட்டம் || ISRO to build third launchpad at Sriharikota
Logo
சென்னை 02-09-2014 (செவ்வாய்க்கிழமை)
  • கேரளாவில் இன்று முழுஅடைப்பு போராட்டம்: தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தம்
  • கோலாம்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
  • பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடுகிறது பாகிஸ்தான் பாராளுமன்றம்
  • நீலகிரியில் தொடர் மழை: கூடலூர், பந்தலூர் தாலுக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • பாம்பன் மீனவர்கள் 2-வது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டம்
  • ஆந்திராவின் புதிய தலைநகர் எது?: இன்று அறிவிக்கிறார் சந்திரபாபு நாயுடு
  • கொல்கத்தாவில் உள்ள சட்டர்ஜி சர்வதேச மைய அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க இஸ்ரோ திட்டம்
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க இஸ்ரோ திட்டம்
புதுடெல்லி,ஜூலை.1-
 
அடுத்த 5 ஆண்டுகளில் 60 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்ப இருப்பதாகவும், அதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித்தளத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க இருப்பதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
 
இதுபற்றி பேசிய ராதாகிருஷ்ணன், ‘அடுத்த 24 மாதங்களில் நமது தொலை தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வெளிநாடுகளின் செயற்கைக்கோள்கள் அடங்கிய 24 ராக்கெட்டுகளை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதுபோல அடுத்த 5 ஆண்டுகளில் 60 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம். அதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
 
தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்கள் தவிர சந்திராயன்-2ஐ ஏவும் திட்டமும் உள்ளதாகவும், மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் இஸ்ரோவின் திட்டம் தற்போது ஆய்வு நிலையிலேயே உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

10 ஆண்டுக்கு மேல் சிறையில் இருப்போரை விடுதலை செய்ய வேண்டும்: வைகோ கோரிக்கை

சென்னை, செப். 2–ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடம் ....»