அசாமில் மூளை காய்ச்சலுக்கு 47 பேர் பலி || assam brain fever attack 47 person dead
Logo
சென்னை 25-10-2014 (சனிக்கிழமை)
அசாமில் மூளை காய்ச்சலுக்கு 47 பேர் பலி
அசாமில் மூளை காய்ச்சலுக்கு 47 பேர் பலி
கவுகாத்தி, ஜுலை.1-
 
அசாம் மாநிலத்தில் ஜப்பான் என்சபலிட்டிஸ் எனும் மூளை காய்ச்சல் நோய் சமீப காலமாக பரவி வருகிறது. அங்குள்ள நல்பாரி, காம்ரூப், சிவ்சாகர், மாரிகான், தாரங் ஆகிய மாவட்டங்களில் பரவலாக இந்த நோய் தாக்கியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 47 பேர் உயிரிழந்து இருப்பதாக மாநில சுகாதார துறை கூறியுள்ளது.
 
கடந்த 3 நாட்களில் மட்டுமே 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 332 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நோய் விலங்குகளிடம் இருந்த மனிதனுக்கு பரவுகிறது. நோய் ஏற்பட்டவரை கடிக்கும் கொசு மற்றவரை கடிக்கும்போது அவருக்கும் நோய் பரவுகிறது. நோய் ஏற்பட்டதும் கடுமையான காய்ச்சல், தலைவலி ஏற்படுகிறது. மூளைப்பகுதியில் வீக்கமும் ஏற்படுகிறது. உடனடியாக சிகிச்சை பெற்றால் மட்டுமே நோய் குணமாகிறது.
 
இல்லை என்றால் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் நோய் தாக்கியவர்களுக்கு மூளை பாதிப்பும் உருவாகிறது. தொடர்ந்து பல இடங்களிலும் நோய் பரவி வருவதால் அசாம் மக்களிடையே பீதி ஏற்பட்டு உளளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு: 5 கட்டங்களாக வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து இரு மாநிலங்களிலும் தேர்தலை நடத்த தேர்தல் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif