ஆசிய கபடி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கி தந்த கூலி தொழிலாளி மகள் || asian kabadi match india win gold earned labour worker daughter
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
ஆசிய கபடி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கி தந்த கூலி தொழிலாளி மகள்
ஆசிய கபடி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கி தந்த கூலி தொழிலாளி மகள்
ஈரோடு, ஜூன். 30-
 
சீனாவில் உள்ள கயாங் நகரில் ஆசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் பீச் கபடி சாம்பியன்ஷிப் மகளிர் போட்டியில் தென்னிந்தியாவில் இருந்து கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரி மாணவி எஸ். மார்ஷல் மேரி என்ற மாணவி பங்கேற்றார். இவர் பங்கேற்ற மகளிர் அணி இறுதி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்தது.  
 
இந்த வீராங்கனை விமானத்தில் நேற்று சென்னை வந்தார். கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை 11 மணி அளவில் ஈரோடு வந்தார். ஈரோடு ரெயில்நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரி தாளாளர் வெங்கடாஜலம், முதல்வர் ஜெகதாலட்சுமணன், பயிற்சியாளர் பழனிச்சாமி ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் கபாடி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.  
 
சாதனை படைத்த தங்க மங்கை மார்ஷல் மேரி பி.கே.ஆர். கல்லூரியில் எம்.காம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஆகும். இவரது தந்தை சவரியப்பன் கூலிதொழிலாளி ஆவார். இந்த மாணவி விளையாட்டு துறையில் சாதனை படைத்து வருவதால் கல்லூரி நிர்வாகம் அவருக்கு இலவச கல்வியை அளித்து வருகிறது.
 
மேலும் இதுபோன்று ஆக்கி, வாலிபால், கபடி, தடகள பிரிவில் விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ள 68 மாணவிகளுக்கு கல்லூரியில் இலவச கல்வி அளிக்கப்படுவதாக கல்லூரி தாளாளர் வெங்கடாஜலம் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - ஈரோடு

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif