கடையை அபகரிக்க முயற்சி: வியாபாரிகள் சங்க தலைவர் மீது பெண் புகார் || shop encorachment try lady complaint on merchants association leader
Logo
சென்னை 22-09-2014 (திங்கட்கிழமை)
  • என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து இன்று 6-ம் கட்ட பேச்சுவார்த்தை
  • துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்கக்கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • தமிழ்நாட்டில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: இன்று ஓட்டு எண்ணிக்கை
கடையை அபகரிக்க முயற்சி: வியாபாரிகள் சங்க தலைவர் மீது பெண் புகார்
கடையை அபகரிக்க முயற்சி: வியாபாரிகள் சங்க தலைவர் மீது பெண் புகார்
திருவண்ணாமலை, ஜூன்.30-
 
செங்கத்தை சேர்ந்தவர் ரவிசந்திரன் ஆசிரியர். இவரது மனைவி புஷ்பலதா. இவர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
 
அதில் கூறியிருப்பதாவது:-
 
எனது தந்தையின் சொத்தை பாகப்பிரிவினை செய்தபோது செங்கத்தில் உள்ள ஒரு கடை எனது பெயருக்கு வந்தது. இந்த கடையில் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வெங்கடரத்தனம் வாடகைக்கு அரிசி மண்டி நடத்தி வருகிறார்.
 
இவர் 30 மாதமாக வாடகை தரவில்லை. கடையை காலி செய்ய சொன்னால் எங்களை மிரட்டுகிறார். ரூ.6 லட்சம் தருகிறேன் கடையை தனது பெயருக்கு எழுதிவைக்கும்படி மிரட்டி வருகிறார். கடையை தராவிட்டால் கல்லூரியில் படிக்கும் எனது மகனின் படிப்பையும் ஆசிரியராக இருக்கும் எனது கணவர் ரவிசந்திரனின் பணியையும் சீரழித்து விடுவேன் என்று மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
இது குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருவண்ணாமலை