சிவசேனா மற்றும் ஐ.ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவினால் மட்டுமே பிரணாப் வெற்றி பெற முடியும்: பால் தாக்கரே || Pranab win possible only with Sena jdu support thackeray
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
சிவசேனா மற்றும் ஐ.ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவினால் மட்டுமே பிரணாப் வெற்றி பெற முடியும்: பால் தாக்கரே
சிவசேனா மற்றும் ஐ.ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவினால் மட்டுமே பிரணாப் வெற்றி பெற முடியும்: பால் தாக்கரே
மும்பை, ஜூன் 30-
 
ஜூலை 19-ந்தேதி நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி மற்றும் பி.ஏ.சங்மா ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.
 
பிரணாப் முகர்ஜிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள், ஐக்கிய ஜனதாளம், சிவசேனா காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளன. இதேபோல், பி.ஏ.சங்மாவை பா.ஜனதா கூட்டணி, அ.தி.மு.க. பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.
 
ஐக்கிய ஜனதாளம் பிரணாபுக்கு ஆதரவு அளிப்பதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது போல தகவல்கள் வெளியாயின. இதனைத் தொடர்ந்து, பிரணாபுக்கு மட்டுமே ஆதரவு, கட்சிக்கு அல்ல என்று சரத் யாதவ் தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பிரணாப் முகர்ஜியோ அல்லது சங்மாவோ தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. தங்களின் கட்சியின் ஆதரவை மட்டுமே முன்னிறுத்தி வெற்றி பெறவும் முடியாது. பிற கட்சிகளின் ஆதரவு அவர்களுக்கு மிக அவசியம்.
 
பிரணாப் வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, மன்மோகன் சிங், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத், ராம்விலாஸ் பஸ்வான், டி.ஆர். பாலு உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய இத்தனை பேர் உடன் இருந்ததால் மட்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிட முடியாது. சிவசேனா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் முழு ஆதரவு காரணமாகவே வெற்றியை காணப்போகிறது.
 
மேலும், பிரணாப் அனுபவம் மிக்கவர். நல்ல நிர்வாக திறன் உள்ளவர். அதனால் அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டில் முன்னேற்றம் ஏற்படுமே தவிர எந்த நஷ்டமும் ஏற்படாது. நமது நாட்டின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு அவரை ஆதரிக்க முடிவு செய்தது சிவசேனா.
 
மன்மோகன் சிங்கின் ஆட்சியில் பிரணாப் முக்கிய பங்காற்றினார். அவர் ஜனாதபதி ஆக தேர்வாகப் போவதால் மத்திய அரசு சரிவை சந்திக்கும் என எதிர்கட்சிகள் மகிழ்ச்சி அடைகின்றனர். எதுவாக இருந்தாலும், பிரணாப்புக்கு மட்டுமே எங்களது ஆதரவு. ஆளும் கட்சிக்கு அல்ல என்பதை தெளிவுப்படுத்துகிறேன் என கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

டெல்லிக்கு ரெயிலில் சென்ற ராணுவ தளபதி மாயம்: தீவிரவாதிகளால் கடத்தப்பட்டாரா?

பீகார் மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் சென்ற இளம்வயது ராணுவ தளபதி மாயமான சம்பவம் பெரும் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif