தூத்துக்குடியில் அகில இந்திய கடற்கரை கைப்பந்து போட்டி || tuticorin all india beach volleyball competition
Logo
சென்னை 24-11-2014 (திங்கட்கிழமை)
  • முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா மும்பையில் இன்று காலமானார்
  • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது
தூத்துக்குடியில் அகில இந்திய கடற்கரை கைப்பந்து போட்டி
தூத்துக்குடியில் அகில இந்திய கடற்கரை கைப்பந்து போட்டி
தூத்துக்குடி, ஜூன்.30-
 
 
தூத்துக்குடி பியர்ல்சிட்டி பீச் வாலிபால் குழு, வ.உ.சி. துறைமுக விளையாட்டு கழகம் இணைந்து அகில இந்திய அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கடற்கரை கைப்பந்து போட்டிகள் தூத்துக்குடி துறைமுக கடற்கரை மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது.
 
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ஆந்திரா மாநில அணி, கோவா அணி, இந்தியன் ரெயில்வே அணி, துறைமுக அணி, ஜூனியர் இந்தியா அணி உள்பட 10 அணிகள் கலந்து கொண்டன.
 
பெண்கள் பிரிவில் ஆந்திர மாநிலம், கோவா, தமிழ்நாடு, இந்தியன் ரெயில்வே, கோவை உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்டன.  
 
முதல் போட்டியில் ‘ஸ்டேட்‘ அணியும், சென்னை சிட்டி போலீஸ் அணியும் விளையாடின. இதில் ‘ஸ்டேட்‘ வங்கி அணி 21-16, 21-14 என்ற நேர் புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
 
தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இந்தியன் யூத் அணியும், தூத்துக்குடி வ.உ.சி. அணியும் மோதின. இதில் இந்தியன் யூத் அணி வ.உ.சி அணியை 21-18, 18-21, 15-12 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
 
தொடர்ந்து கோவா அணியும், இந்தியன் ரெயில்வே அணியும் விளையாடியதில், இந்தியன் ரெயில்வே அணி 21-16, 10-21, 15-13 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

சீர்காழி அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்

சீர்காழி, பிப். 8–சீர்காழி ஈசானி தெருவில் உள்ள வடபாதி மாரியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ....»