வீட்டு கடன் ரூ. 25 லட்சமாக உயர்வு: அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் ஜெயலலிதா அறிவிப்பு || government officers house loan increased 25 lakhs jaya
Logo
சென்னை 30-07-2015 (வியாழக்கிழமை)
வீட்டு கடன் ரூ. 25 லட்சமாக உயர்வு: அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள்- ஜெயலலிதா அறிவிப்பு
வீட்டு கடன் ரூ. 25 லட்சமாக உயர்வு: அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள்- ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஜூன். 30-
 
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
அரசு நிர்வாகத்தின் அச்சாணியாகவும், அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாகவும் விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இதேபோன்று, என் கடன் பணி செய்து கிடப்பது என்ற அப்பர் பெருமானின் வாக்கிற்கு இணங்க அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் ஆசிரியர் பெருமக்கள்.
 
நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் வண்ணம் ஏழ்மையும், கல்வியறிவின்மையும் முற்றிலும் நீங்குவதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா எடுத்து வருகிறார்.
 
அந்த வகையில், தற்பொழுது அதிகரித்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, 1.4.2012 முதல் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும் வீடு கட்டும் முன்பணக் கடன் உச்ச வரம்பினை 15 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அகில இந்திய பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்ச வரம்பினை 25 லட்சம் ரூபாயிலிருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தியும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இதுபோன்று, அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி வரும் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 1.7.2012 முதல் 30.6.2016 வரை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட, முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதலளிக்கப்பட்ட 52 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுடன், கூடுதலாக 61 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி 113 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.அதுபோல் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மருத்துவக் காப்பீட்டு நிதி உதவியான 2 லட்சம் ரூபாய் என்பது 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
இந்த அளவிற்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
இத்திட்டத்தின்கீழ் அரசு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்ற பணியாளர்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசின் கீழ் வரும் பல்கலைக் கழகங்கள் ஆகிவற்றைச் சேர்ந்த பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பணியாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் பயன்பெறுவார்கள்.
 
அரசின் இந்த நடவடிக்கைகள், அரசு ஊழியர்கள் சொந்த வீடு கட்டுவதற்கும், தங்களது உடல் நலத்தை நன்கு பாதுகாப்பதற்கும் மிகுந்த பயன் உள்ளதாக அமையும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தூக்கிலிருந்து தப்ப யாகூபுக்கு மேலும் ஒரு வாய்ப்பு: நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட்டில் மனு

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை பெற்ற யாகூப் மேனனை நாக்பூர் சிறையில் இன்று தூக்கிலிட ....»

MM-TRC-B.gif