10 வயதில் 20 ஆன் லைன் தேர்வுகள்: பாளை மாணவன் சாதனை || on line exams young age palay student record
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
  • சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை: புதுச்சேரி, காரைக்காலிலும் விடுமுறை
  • கனமழை நீடிப்பதால் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
  • வெள்ளக்காடான சாலைகள்: சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்
  • மழையால் தண்டவாளம் மூழ்கியது: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 ரெயில்கள் ரத்து
  • தண்டவாளம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் புதுச்சேரி-திருப்பதி விரைவு ரெயில் ரத்து
  • சென்னை அருகே ஊரப்பாக்கம், தாம்பரத்தில் ராணுவ வீரர்கள் மீட்பு பணி
  • நாகை, திருவண்ணாமலையில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
  • வெள்ள பாதிப்பு குறித்து ஜெயலலிதாவிடம் கேட்டறிந்த மோடி: முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி
  • சென்னை விமான நிலையத்தில் கனமழை காரணமாக ஓடுபாதை மூடப்பட்டது - விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன
10 வயதில் 20 ஆன்-லைன் தேர்வுகள்: பாளை மாணவன் சாதனை
10 வயதில் 20 ஆன்-லைன் தேர்வுகள்: பாளை மாணவன் சாதனை
நெல்லை, ஜுன்.30-

பாளை மகாராஜநகர் பொன்மணி காலனியை  சேர்ந்தவர் கார்த்திக். இவர் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் விஞ்ஞானியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சந்துரு(வயது10). பாளையில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இவன் அமெரிக்க கம்ப்யூட்டர் நிறுவனங்கள் நடத்தும் ஆன்-லைன் தேர்வுகளில் 20 தேர்வுகளை எழுதியுள்ளான். இது உலக அளவில் சாதனை என்று கூறப்படுகிறது. அதாவது 10 வயதில் 20 ஆன்-லைன் தேர்வுகள் எழுதியது சந்துரு மட்டும்தான். இதுகுறித்து சந்துருவின் பெற்றோர் கார்த்திக்-லதா ஆகியோர் கூறியதாவது:-

சந்துருவுக்கு சிறுவயதில் இருந்தே கம்ப்யூட்டர் மீது மிகவும் ஆர்வம். இதனால் அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆன்-லைன் தேர்வுகளை எழுதினான். தற்போது சந்துருவுக்கு 10 வயது ஆகிறது. ஆனால் 20 ஆன்-லைன் தேர்வுகள் எழுதியுள்ளான். இது உலக சாதனை ஆகும்.

இதற்கு முன் பாகிஸ்தானை சேர்ந்த மாணவன் இர்தாஷா ஐதர் தனது 19 வயதில் 20 ஆன்-லைன் தேர்வுகள் எழுதியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை  சந்துரு முறியடித்துள்ளான். மாணவன் இர்தாஷா ஐதருக்கு அவனது நாடான பாகிஸ்தான் பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்குவித்துள்ளது.

அதேபோல் நமது நாடு சந்துருவிற்கு பல சலுகைகளை வழங்கினால், நமது நாட்டுக்கு உலக அளவில் பெருமை சேர்ப்பான். மாணவன் சந்துரு தனது 9 வயதில்அபாகஸ் கணித முறையில் 8 லெவல்களை முடித்து, தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளான். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சாதனை படைத்த மாணவன் சந்துருவுக்கு  எதிர்காலத்தில் நெட்வொர்க் கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஆவதே லட்சியமாக உள்ளது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருநெல்வேலி

section1

நெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் 140 அடியை தாண்டியது

நெல்லை, டிச. 1–வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif