பராமரிப்பு பணிகளுக்கு நாளை 6 மணி நேரம் சென்னை விமான நிலையம் மூடல் || chennai airport closed maintenance work
Logo
சென்னை 22-09-2014 (திங்கட்கிழமை)
பராமரிப்பு பணிகளுக்கு நாளை 6 மணி நேரம் சென்னை விமான நிலையம் மூடல்
பராமரிப்பு பணிகளுக்கு நாளை 6 மணி நேரம் சென்னை விமான நிலையம் மூடல்
சென்னை, ஜூன்-29

சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தை தற்போது விரிவுபடுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலைகள் பாதி முடிவடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு உள்நாட்டு முனையம் திறக்கப்பட்டது. இதன்மூலம் சர்வதேச தரத்திற்கு விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இவ்விமான நிலையத்தில் ஓடு பாதையில் மேற்கொள்ளவிருக்கும் பராமரிப்பு பணிகளுக்காக நாளை 6 மணி நேரம் ஓடு பாதை மூடப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், நாளை பிற்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை விமான நிலையத்தின் அனைத்து ஓடு பாதைகளும் மூடப்படுகின்றன.

ஓடு பாதைகள் மூடப்படுவதையடுத்து சர்வதேச, உள்நாட்டு விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, டெல்லி, கொச்சி, கொல்கத்தா செல்லும் ஏர்இந்தியா விமானங்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவமழை இன்னும் 10 ....»