மன்னார்குடி திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் ஜுலை முதல் வாரத்தில் இயக்கப்படும்: திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் தகவல் || mannargudi tirupati express train july firest week to start
Logo
சென்னை 24-10-2014 (வெள்ளிக்கிழமை)
மன்னார்குடி- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் ஜுலை முதல் வாரத்தில் இயக்கப்படும்: திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் தகவல்
மன்னார்குடி- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் ஜுலை முதல் வாரத்தில் இயக்கப்படும்: திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் தகவல்
திருவாரூர்,ஜுன்.28-
 
திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளராக மஞ்சுளா ரெங்கராஜன் பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் திருச்சி கோட்ட அளவில் உள்ள அனைத்து ரெயில்பாதைகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். நேற்று திருச்சியில் இருந்து சிறப்பு ரெயில் மூலமாக புறப்பட்டு காரைக்கால் வரை சென்று ஆய்வு செய்தார். முன்னதாக கொரடாச்சேரி ரெயில் நிலையத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
அதனைத் தொடர்ந்து திருவாரூர் ரெயில்நிலையத்திற்கு அவர் வந்தார். அங்கு முன்பதிவு மையம், பயணிகள் ஓய்வு அறை, குடிநீர், கழிவறை வசதிகளை ஆய்வு செய்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
திருச்சி கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில்பாதைகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறேன். அனைத்து ரெயில்நிலையத்திலும் குடிநீர், கழிவறை உள் ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. பயணிகளுக்கு தேவையான வசதி அனைத்தும் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இளைய சமுதாயத்தினர் ரெயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் நிச்சயம் விபத்துக்களை தவிர்க்கலாம்.
 
பெங்களூர்- சேலம் பாசஞ்சர் ரெயில் நாகூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து ஆத்தூர், விருத்தாச்சலம், வடலூர், கடலூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை வழியாக நாகூர் செல்கிறது.
 
இந்த ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. 1-ந்தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு நாகூரை வந்தடையும். மறுநாள் (2-ந்தேதி) நாகூரில் இருந்து புறப்பட்டு பெங்களூர் செல்கிறது. மன்னார்குடி- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் ஜுலை மாதம் முதல் வாரத்தில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருவாரூர்

section1

வலங்கைமான் அருகே போட்டி போட்டு மதுகுடித்த 3 பேர் பலி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கீழ அமராவதி சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif