எங்களிடம் மரபணு பரிசோதனை செய்யப்படவில்லை: அபு ஜிண்டாலின் தாய் || Abu Jundal mother family DNA samples
Logo
சென்னை 07-05-2015 (வியாழக்கிழமை)
எங்களிடம் மரபணு பரிசோதனை செய்யப்படவில்லை: அபு ஜிண்டாலின் தாய்
எங்களிடம் மரபணு பரிசோதனை செய்யப்படவில்லை: அபு ஜிண்டாலின் தாய்
பீட், ஜூன் 28-

கடந்த 2008-ல் மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தீவிரவாதி அபு ஜிண்டால் சில தினங்களுக்கு முன்பு டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டான்.

இவனுக்கு சவுதி அரேபியாவில் வைத்து மரபணு சோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகே அங்கிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கராச்சியில் இருந்து கொண்டு மும்பை தாக்குதலை அபு ஜிண்டால் வழிநடத்தி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள ஹாத்தி கன்னா பகுதியில் உள்ள அபுவின் தாய் ரெகானா பேகமிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

எனக்கும் எனது கணவரான சக்கியுதீனுக்கும் இதுவரை எந்தவித மரபணு சோதனையும் நடத்தப்படவில்லை. இதுகுறித்து எதுவும் எங்களுக்கு தெரியாது. எனவே தகுந்த விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். இங்கிருந்து காணாமல் போனதற்கு பின் அபுவை நாங்கள் பார்க்கவும் இல்லை. அவனைத் தேடவும் இல்லை என கூறினார்.

கடந்த 2006-ம் ஆண்டு அவுரங்காபாதில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்தபின் அபு மாயமாகி உள்ளான். அதற்கு பிறகு அவனை தேட குடும்பத்தார் முயற்சிக்கவில்லை என கூறப்படுகிறது.

எனினும் அபுவின் அப்போதைய முகமும் இப்போது போலீசால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள முகமும் வித்தியாசமாக உள்ளதால் இதுகுறித்து சரியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ரெகானா கூறியுள்ளார். அவரது வீட்டின் முன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னாரின் மகன் இவர் என்பதை முகத் தோற்றத்தையோ, உடல் தோற்றத்தையோ வைத்து கண்டுபிடிக்க முடியாவிட்டால் மரபணு பரிசோதனை மூலம் இன்னார் யார் என்பதை துல்லியமாக கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பூகம்பத்தின்போது பாதிக்காத நிலையில் தாஜ்மகால் சுவர் திடீரென இடிந்ததால் பரபரப்பு

ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மகாலில் ஒரு சுவர் பகுதி நேற்று காலை 6 மணிக்கு ....»

amarprakash160x600.gif