கோவில்பட்டியில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை: ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 4 பேர் கைது || kovilpatti new groom murder real estate owner arrest
Logo
சென்னை 22-08-2014 (வெள்ளிக்கிழமை)
கோவில்பட்டியில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை: ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 4 பேர் கைது
கோவில்பட்டியில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை: ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 4 பேர் கைது
நாலாட்டின்புதூர், ஜூன். 28-

கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது31). இவர் ரியல் எஸ்டேட், கம்ப்யூட்டர் சர்வீஸ் ஆகிய தொழில்கள் செய்து வந்தார். மேலும் ஒருவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

இவருக்கு நாளை (29-ந்தேதி) திருமணம் நடக்க இருந்த நிலையில் கடந்த 26-ந்தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகள் குறித்து துப்புதுலக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஜெயக்குமாருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த கணேசன் என்பவர் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து ஜெயக்குமாரை கொன்றது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த கணேசன், கோவில்பட்டி டால் துரை பங்களா தெருவை சேர்ந்த மகராஜ் (30), எட்டையபுரத்தை சேர்ந்த ஜோசப் (28) கோவில்பட்டி அருகே உள்ள இனாம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த பொன்ராஜ் (32) ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 4 அரிவாள்கள், 2 மோட்டார் சைக்கிள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கொலைக்கான காரணம் குறித்து கணேசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

ஜெயக்குமாரும் நானும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தோம். அப்போது ஒரு நிலத்தை எனக்கு தெரியாமல் ஒரு நபருக்கு விற்க அட்வான்ஸ் வாங்கியுள்ளார். இதுகுறித்து கேட்டபோது எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அட்வான்ஸ் வாங்கிய பணத்தை தருமாறு கேட்டேன். ஆனால் ஜெயக்குமார் தராமல் காலம் கடத்தினார். சேர்ந்து தொழில் செய்தும் நம்பிக்கை துரோகம் செய்ததால் ஜெயக்குமார் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஆகவே அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.

அதன்படி எனது தொழிலுக்கு உதவியாக உள்ள மகராஜ், ஜோசப், பொன்ராஜ், கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மணிகண்டன் (28) ஆகியோரிடம் அதுபற்றி கூறினேன். அவர்களும் அதற்கு சம்மதித்தனர். இதனைத்தொடர்ந்து ஜெயக்குமாரை கொல்ல திட்டமிட்டோம்.

அதன்படி கடந்த 26-ந்தேதி தோட்டத்தில் நின்ற ஜெயக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தூத்துக்குடி

section1

தூத்துக்குடி அருகே போலீஸ்காரரை கொல்ல முயற்சி: 4 பேருக்கு வலைவீச்சு

ஆறுமுகநேரி, ஆக. 22–தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை அடுத்த குரும்பூர் அருகே உள்ள புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ....»