சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஆலன் ஐசக் பதவியேற்பு || Sharad Pawar reign ICC president ends Isaac takes over
Logo
சென்னை 04-10-2015 (ஞாயிற்றுக்கிழமை)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஆலன் ஐசக் பதவியேற்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஆலன் ஐசக் பதவியேற்பு
கோலாலம்பூர், ஜூன் 28-

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த மாநாடு தலைமை நிர்வாக குழு கூட்டத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நிர்வாக அதிகாரிகளின் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கவுன்சிலின் தலைவராக கடந்த 2 வருடங்களாக சரத்பவார் இருந்து வந்தார். அவரது பதவி காலம் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தனது பதவி பொறுப்பை நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஆலன் ஐசக்கிடம் பவார் ஒப்படைத்தார்.

இந்த பதவியில் 2014-ம் ஆண்டு வரை ஐசக் நீடிப்பார். ஆனால் அதற்கு பிறகு இந்த தலைவர் பதவிக்கு மாறாக சேர்மன் பதவி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பதவி ஏற்றபின் ஆலன் ஐசக் உரையாற்றியதாவது:

இதுவரை பதவியில் இருந்த தலைவர்களின் பட்டியலை பார்க்கும் போது இந்த பதவியின் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்கிறேன். இந்த பதவிக்கு தகுதிப்பெற்றதற்கு பெருமைப்படுகிறேன். ஐசிசி-யின் தற்போதைய ஆரோக்கியமான நிலையை தக்கவைக்க கடும் உழைப்பு அவசியம் என உணர்கிறேன். மேலும், கவுன்சிலின் நம்பகத்தன்மையை சர்வதேச அளவில் நிலைநிறுத்த மூன்று வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் நேர்மையும் ஒற்றுமையும் நிலைத்திட பாடுபடுவேன் என கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

தென்ஆப்பிரிக்காவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?: நாளை 2-வது 20 ஓவர் போட்டி

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ....»

VanniarMatrimony_300x100px_2.gif