ஜனாதிபதி தேர்தல்: பா.ஜனதா தலைவர்கள் முன்னிலையில் பி.ஏ.சங்மா வேட்புமனு தாக்கல் || President election BJP leaders Sangma petition filed
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
ஜனாதிபதி தேர்தல்: பா.ஜனதா தலைவர்கள் முன்னிலையில் பி.ஏ.சங்மா வேட்புமனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தல்: பா.ஜனதா தலைவர்கள் முன்னிலையில் பி.ஏ.சங்மா வேட்புமனு தாக்கல்
புதுடெல்லி, ஜூன் 28-

புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய வரும் சனிக்கிழமை கடைசி நாளாகும்.  
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பி.ஏ. சங்மா போட்டியிடுகிறார்.  

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் முன்னிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து இன்று மதியம் 2.30 மணிக்கு பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக், அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்பட பலர் உடன் இருந்தனர். இவரது வேட்பு மனுவை பாராளுமன்ற செயலாளர் வி.கே.அக்னி ஹோத்ரி பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, வேட்புமனு தாக்கல் செய்யும் முன் செய்தியாளர்களிடம் சங்மா கூறியதாவது:

பழங்குடியினர் எப்போதும் காங்கிரசுக்கு ஆதரவாகவே இருந்தனர். இந்த தேர்தலில் பழங்குடியினருக்கு வாய்ப்பு தரும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆதரவு அளிப்பார்கள் என நம்பிக்கை இருந்தது. ஆனால் காங்கிரஸ் இதற்கு ஆதரவளிக்கவில்லை.

எனினும் பல அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர். பழங்குடியினர் ஒன்று சேர்ந்து வெற்றியை நிரூபிப்போம். மேலும், நவீன் பட்நாயக், ஜெயலலிதா உள்ளிட்டோர் எனக்கு ஆதரவு அளித்துள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மதரசாக்களில் பாலியல் தொந்தரவு: கேரள பெண் நிருபரைத் தொடர்ந்து இயக்குனரும் புகார்

கேரளாவைச் சேர்ந்த பெண் நிருபர் ஒருவர், அண்மையில் மதரசாவில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக பதிவிட்டதையடுத்து, அவரது ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif