தி.மு.க.பிரமுகர் வி.கே.குருசாமி மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு || dmk volunteer vk gurusamy land case dismissed madurai highcourt
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
தி.மு.க.பிரமுகர் வி.கே.குருசாமி மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தி.மு.க.பிரமுகர் வி.கே.குருசாமி மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை, ஜூன்.28-

மதுரை, அண்ணாநகரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில், 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது 7 செண்டு நிலத்தையும் அதில் இருந்த கட்டிடங்களையும் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்த வி.கே.குருசாமி, அவருடைய மகளும், 57-வது வார்டு தி.மு.க கவுன்சிலருமான விஜயலட்சுமியின் கணவரான வக்கீல் எஸ்.பாண்டி ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் கூறினார்.

அதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.கே.குருசாமி, எஸ்.பாண்டி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தங்கள் மீதான வழக்கினை ரத்து செய்யக்கோரி அவர்கள் இருவரும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- புகார்தாரருக்கு சொந்தமான கீழ்மதுரை ரோட்டில் உள்ள 7 செண்டு நிலத்தை 33 ஆண்டுகளாக அவர் அனுபவித்து வந்ததாகவும், அதில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கு வாடகை வசூல் செய்ததாகவும் புகாரில் கூறி உள்ளார்.

அந்த சொத்துக்களை நாங்கள் (வி.கே.குருசாமி, எஸ்.பாண்டி) அடியாட்களுடன் வந்து மிரட்டி அபகரித்துக் கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் அந்த சொத்துக்களை 2008-ம் ஆண்டிலேயே எஸ்.பாண்டி உரிய விலை கொடுத்து வாங்கியுள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன. போலீசார் ஒரு பொய்யான புகார் மீது உரிய விசாரணை நடத்தாமல் கண்மூடித்தனமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எஸ்.பாண்டி மதுரை மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் கற்பனைக் கதைபோல உள்ளன. அரசியல் காரணங்களுக்காகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அதை ரத்து செய்து உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி ஏ.செல்வம் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் எஸ்.பி.சாமுவேல்ராஜ் ஆஜரானார். முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பிப்ரவரி மாதம் 2010-ம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக 29.7.2011 அன்று புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தாமதத்துக்கான விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்ற மனுதாரர் தரப்பு வாதம் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் உள்ளது. எனவே மனுதாரர்கள் மீதான இந்த நிலஅபகரிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மதுரை

section1

சமயநல்லூர் அருகே தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி

வாடிப்பட்டி, பிப். 10–மதுரை ஆரப்பாளையம் கண்மாய் கரை பகுதியை சேர்ந்த ராஜாங்கம் மகன் ராயர்குமார் (வயது30). ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif