ஓட்டேரி பகுதியில் குடிநீரில் சாக்கடை கலப்பு: குறைகேட்கும் கூட்டத்தில் கவுன்சிலர் புகார்` || chennai corporation counsilore complaint on officers
Logo
சென்னை 25-05-2015 (திங்கட்கிழமை)
ஓட்டேரி பகுதியில் குடிநீரில் சாக்கடை கலப்பு: குறைகேட்கும் கூட்டத்தில் கவுன்சிலர் புகார்`
ஓட்டேரி பகுதியில் குடிநீரில் சாக்கடை கலப்பு: குறைகேட்கும் கூட்டத்தில் கவுன்சிலர் புகார்`
சென்னை, ஜூன் 28-
 
சென்னை மாநகராட்சி சார்பில் வார்டுகள் 70 முதல் 76 வரை உள்ள பகுதியை சேர்ந்த மக்களின் குறை கேட்கும் கூட்டம் இன்று நடந்தது. மேயர் சைதை துரைசாமி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். துணை மேயர் பெஞ்சமின், நீலகண்டன் எம்.எல்.ஏ., கமிஷனர் (பொறுப்பு) விஜயராஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசியதாவது:-
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மாதம்தோறும் தொகுதி வாரியாக மக்கள் குறைகள் கேட்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் எழுப்பப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அடுத்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றார்.
 
70-வது வார்டில் தெருக்களில் ஒழுங்காக குப்பைகள் அள்ளாததால் குப்பைகள் தேங்குகிறது. வாரம் 3 நாட்கள் மட்டுமே குப்பை அள்ளுகிறார்கள். குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது என்று பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
 
இதுபற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரித்த மேயர் அந்த பகுதியில் 43 துப்புறவு பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், 1 வாரத்தில் போதிய பணியாளர்களை நியமனம் செய்து பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றார்.
 
மேலும் அந்த பகுதியில் 7 இடங்களில் குப்பை மாற்று தொட்டிகள் கட்டப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் தரப்பில் இன்னும் கட்டுமானப் பணிகள் முடியவில்லை என்று குற்றம்சாட்டினர்.
 
70-வது வார்டு வாசன் தெருவில் 13 வருடமாக ரோடு போடவில்லை என்று புகார் தெரிவித்தனர். அந்த ரோடு 1 மாதத்தில் சீரமைக்கப்படும் என்று மேயர் உறுதி அளித்தார்.
 
ஓட்டேரி பகுதியில் டிரான்ஸ் தெருவில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாகவும், தினமும் அதை பயன்படுத்தும் பொது மக்கள் பாட்டில்களை எடுத்து வந்து புகார் கூறுகிறார்கள். இது தொடர்பாக 1 மாதமாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கவுன்சிலர் சுகுமார் குற்றம் சாட்டினார். மேலும் மின்சார கேபிள் எரிந்ததால் ஒரு வீடு 1 மாதமாக மின் வசதி இல்லாமல் இருளில் தவிப்பதாகவும் கூறினார். மேலும் தெருக்களில் குப்பை குவிந்து கிடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
 
இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் குடிநீர் குழாய்கள் மிகவும் பழமையாக உள்ளது. அவற்றை சீரமைக்க இன்னும் 1 மாதத்துக்கு மேல் ஆகும் என்றனர். உடனே கவுன்சிலர் குறுக்கிட்டு அதுவரை சாக்கடை தண்ணீரையா பொது மக்கள் குடிக்க வேண்டும் என்று ஆவேசமாக கேட்டார்.
 
உடனே மேயர் தற்காலிகமாக அந்த குழாய்களை 1 வாரத்துக்குள் சுத்தம் செய்ய வேண்டும். உடனடியாக அந்த பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

300 ட்ரில்லியன் சூரியன்களுக்கு சமமான அளவு ஒளிரும் புதிய கேலக்ஸி கண்டுபிடிப்பு

சுமார் 300 ட்ரில்லியன் சூரியன்கள் சேர்ந்தால் கிடைக்கும் ஒளிக்கு சமமான அளவு ஒளிரும் புதிய கேலக்ஸி ....»

160x600.gif