முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஜாமீன்: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு || Former minister periyasami bail madurai highcourt branch
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஜாமீன்: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஜாமீன்: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
மதுரை, ஜூன் 28-   

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் சட்டிகரடு மலையில் தி.மு.க. ஆட்சியில் அனுமதியின்றி குவாரி செயல்பட்டது. ஆத்தூர் ஒன்றிய செயலாளர் முரளிதரன் இதை நடத்தினார்.  
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து முரளிதரனை கடந்த 2-ந்தேதி கைது செய்தனர். அவரது வாக்குமூலத்தின்படி முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கைது செய்யப்பட்டார். இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.   

ஏற்கனவே இவர்களது ஜாமீன் மனுவை நிலக்கோட்டை கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி பாலசுந்தரக்குமார், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, முரளிதரன் ஆகியோரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.  

இதையடுத்து ஐ.பெரியசாமி ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஐ.பெரியசாமிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - மதுரை