சானியாவிடம் ஆலோசிக்காமல் கலப்பு இரட்டையர் அணி தேர்வு: மகேஷ் பூபதி குற்றச்சாட்டு || sania mirza mixed doubles team selection mahesh bhoopathi
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
சானியாவிடம் ஆலோசிக்காமல் கலப்பு இரட்டையர் அணி தேர்வு: மகேஷ் பூபதி குற்றச்சாட்டு
சானியாவிடம் ஆலோசிக்காமல் கலப்பு இரட்டையர் அணி தேர்வு: மகேஷ் பூபதி குற்றச்சாட்டு
லண்டன், ஜூன். 28-

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக டென்னிஸ் அணி தேர்வு சர்ச்சை நீடித்து வருகிறது.

ஒலிம்பிக் போட்டிக்கு லியாண்டர் பெயஸ் இரட்டையர் பிரிவில் நேரடி தகுதி பெற்றார். அவருடன் விளையாட மகேஷ் பூபதி, போபண்ணா மறுத்ததால் இந்திய டென்னிஸ் சங்கம் இரண்டு அணிகளை தேர்வு செய்தது.

பெயஸ்-விஷ்ணுவர்த்தன் ஒரு ஜோடி என்றும், மகேஷ் பூபதி-போபண்ணா மற்றொரு ஜோடி என்று அறிவித்தது. அதே நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுடன் லியாண்டர் பெயஸ் ஆடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே சானியா மிர்சாவுக்கு நேற்று முன்தினம்தான் ஒலிம்பிக்கில் விளையாட வைல்டு கார்டு கிடைத்தது. அப்போது அவர் அகில இந்திய டென்னிஸ் சங்கத்துக்கும், லியாண்டர் பெயசுக்கும் கண்டனம் தெரிவித்தார். பெயசுக்காக தான் பலிகடா ஆக்கப்பட்டதாக சானியா ஆவேசம் அடைந்தார். டென்னிஸ் சம்மேளனம் தன்னை இழிவுப்படுத்தி விட்டதாகவும் அவர் கூறி இருந்தார்.

இதற்கு டென்னிஸ் சங்கம் பதில் அளித்து இருந்தது. திறமையான அடிப்படையில் அணி தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சானியா மிர்சாவுக்கு ஆதரவாக மகேஷ் பூபதி கருத்து கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கலப்பு இரட்டையர் போட்டியில் சிறந்த ஜோடி யார் என்பதை சானியாவிடம் கலந்து ஆலோசிக்காமல் அவரது பெயரை வெளியிடப்பட்டுள்ளது. நானும், சானியாவும் கலப்பு இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடி வருகிறோம். சமீபத்தில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் பெற்றோம்.

இதுதொடர்பாக சானியா தெரிவித்த கருத்து சரியானதே. என்னைப் பொறுத்தவரை கலப்பு இரட்டையரில் நானும், சானியாவும்தான் சிறந்த ஜோடி. தற்போது நான் விம்பிள்டன் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

தெற்காசிய விளையாட்டு: தடகளத்தில் ஒரே நாளில் இந்தியா 11 தங்கம் வென்று அசத்தல்

12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இரண்டு நகரங்களில் நடந்து ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif